துபாய் (25 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரசவ அறுவை சிகிச்சையின் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட மருத்துவர் மீது இளம் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பெண் ஒருவர், அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் பிறப்பு வீடியோவை வெளியிட்டதற்காக 50,000 திர்ஹாம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த பெண் மருத்துவமனை மீதும், வீடியோ பதிவு செய்த மருத்துவர் மீதும் புகார் கூறி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
பிரசவத்தின்போது தன் அனுமதியைக் கூட கேட்காமல் வீடியோ எடுத்த்தற்கும், அதனை சமூக வளைதலத்தில் வெளியிட்டதற்கும் இழப்பீடு கேட்டு அல் ஐன் நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.