துபாய் (23 ஜன 2023): துபாய் மீடியா சிட்டி மக்கள் இன்று (திங்கள் கிழமை) பிற்பகல் பல அதிர்வுகளை உணர்ந்தனர்.
என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் பலரும் சமூக வலைதளங்களில், “நில அதிர்வு எதுவும் ஏற்பட்டுள்ளதா?” என கேள்வி எழுப்பினர். மேலும் ஊடகங்களையும் ஆய்வு செய்தனர். எதிலும் நில அதிர்வு அல்லது பூகம்பம் குறித்து தகவல் இல்லை.
Please tell me I’m not the only one who felt this massive #earthquake in #Dubai
Location: Dubai Media City— Pooja Sharma Kautia (@PSKautia) January 23, 2023
மிகுந்த குழப்பத்துக்கிடையே ‘TimeOut Dubai’ என்ற இணையதளம் அது பூகம்பம் அல்ல என்பதை உறுதி செய்தது. மேலும் துபாய் மீடியா சிட்டி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிறுப்பு ஒன்று இடிக்கப்பட்டது என்றும், அதன் தாக்கம்தான் அப்பகுதியில் உள்ள மற்ற கட்டிடங்களில் அதிர்வை ஏற்படுத்தியது என்பதையும் தெளிவு படுத்தியது.
இந்த தகவல் இணையங்களில் பரவியதை அடுத்தே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.