துபாய் (30 அக் 2020):துபாயில் உள்ள ஒரு மரக் கப்பல் உலகின் மிக நீளமான மர கப்பலுக்கான கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனையை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பாரம்பரிய கப்பல் கட்டட தயாரிப்பு நிறுவனமான ஒபைட் பின் ஜுமா பின் ஜூலம் நிறுவனம் படைத்துள்ளது.
உபைட் என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல் 300 அடி நீளமும் 66 அடி அகலமும் கொண்டது. துபாய் டிபி வேர்ல்ட் அருகே நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் கப்பல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மஜித் ஒபைத் ஜுமா பின் மஜித் அல் ஃபாலாசி கின்னஸ் சாதனைக்கான சான்றிதழைப் பெற்றார்.
இந்த சாதனை குறித்து மஜித் ஒபைத் தெரிவிக்கையில், இந்த மகத்தான சாதனை தனது தந்தையின் நிலைப்பாட்டின் முயற்சியாகும் என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஒபாய்ட் பின் ஜுமா பின் ஜூலம் ஸ்தாபனம் என்பது 48 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். நிறுவனம் முதலில் 300 டன் எடையுள்ள கப்பல்களை அல் ஹம்ரியாவில் உள்ள தனது தொழிற்சாலையில் கட்டியது குறிப்பிடத்தக்கது.