புகழ்பெற்ற துபாய் மாலின் பெயர் மாற்றம்!

Share this News:

துபாய் (24 ஜன 2023): துபாயின் சின்னம் என்று பலராலும் சிலாகித்து வர்ணிக்கக்கூடிய “தி துபாய் மால்” அதன் பெயரை மாற்றுகிறது.

உலகின் மிக உயரமாக கட்டடமான புர்ஜ் கலீஃபாவின் அடித்தளத்தில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலின் தற்போதைய பெயர் “தி துபாய் மால்”

பெயரில் இதுவரை “தி துபாய் மால்” என்று அழைக்கப்பட்டு வந்த இது இனி வெறும் ‘துபாய் மால்’ என்று மட்டும் அழைக்கப்படும்.

துபாய் மால் நிறுவனம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பெயரை அறிவித்துள்ளது.

இதுகுறித்த வீடியோவில் ‘புதிய பெயர் ஆனால் இன்னும் உங்களுக்குப் பிடித்த மால்’ என்று ஷாப்பிங் மால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபாய் மால் உலகில் அதிகம் மக்கள் வந்து சென்ற இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்து சென்றதாக அதன் இணையதளம் கூறியுள்ளது.

இது 200 க்கும் மேற்பட்ட சர்வதேச உணவு நிறுவனங்களுடன் 1,200 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.


Share this News:

Leave a Reply