துபாய் (17 டிச 2022): சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் உலகில் துபாய் இரண்டாவது இடத்தில் உள்ளது.
uromonitor International இன் 2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 சுற்றுலா நகரங்களின் பட்டியலில் பாரிஸ் முதலிடத்திலும், துபாய் இரண்டாமிடத்திலும் உள்ளது.
முதல் பத்து பட்டியலில் உள்ள மற்ற நகரங்கள் ஆம்ஸ்டர்டாம், மாட்ரிட், ரோம், லண்டன், முனிச், பெர்லின், பார்சிலோனா மற்றும் நியூயார்க்.
அதேவேளை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான நகரமாக துபாய் முதலிடத்தில் உள்ளது. நிதித்துறை, வணிகத் துறை, சுற்றுலா மற்றும் நிலைத்தன்மை ஆகிய ஆறு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சுற்றுலா பயணிகளை கவரும் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.