துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவை சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்!

Share this News:

துபாய் (22 ஜன 2023): துபாயில் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் அல் பராக மருத்துமனையில் மிக சிறப்பாக நடைபெற்றது..

IWF பேரவையின் அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி தலைமையில்,IWF அமீரக துணைத்தலைவர் A.S. இப்ராஹிம், IWF அமீரக பொருளாளர் டாக்டர் அப்துல் காதர் IWF அமீரக துணைச்செயலாளர் பொறியாளர் முகம்மது கஜ்ஜாலி,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது…

இதில் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக HASHEMITE Group யின் நிர்வாக மேலாளர் திரு. வெங்கடேஷன் மற்றும் திருமதி பூவேனேஷ்வரி மற்றும் தொழில் அதிபர் இளையான்குடி அபுதாஹீர் மற்றும் திரு பால் பிரபாகரன் (TEPA) தலைவர், அலஅயீன் இந்தியன் அசோஷீயன் தலைவர் மூபாரக் ஆகியோர் கலந்து கொண்டரை ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்வில் IWF துபாய் மண்டல தலைவர் உமர் ஃபாரூக்,IWF மண்டல செயலாளர் கீழக்கரை ஜைனுல் ஆபிதீன்,IWF மண்டல துணை தலைவர் முஹம்மது பாரூக் ,மமக செயலாளர் அடியகை சேகு தாவூத்,IWF மண்டல துணை செயலாளர் மதுக்கூர் பைசல்,IWF மண்டல மருத்துவ அணி செயலாளர் மன்னை அமீன் லால்பேட்டை யாசர் அரபாத் திருப்பூர் கலீல் ஷார்ஜா மண்டல தலைவர் சலீம் ரப்பாணி அல் அய்ன் மண்டல நிர்வாகி பாம்பன் ஐலால், கடலூர் யாசின், அன்சாரி, சென்னை பிலால் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்த முகாமில் நூற்றுக்கு மேற்ப்பட்டோர் இரத்த தானம் செய்தார்கள். இறுதியாக IWF துபாய் மண்டலம் சார்பாக இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Share this News:

Leave a Reply