துபாய் (28 ஜூன் 2021) பல்வேறு நாடுகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த 2,000 பேர் இந்த 2021 ஆண்டில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, முகமது பின் ரஷீத் இஸ்லாமிய கலாச்சார மையம் அறிவித்துள்ளது.
துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறையின் (ஐ.ஏ.சி.ஏ.டி) கீழ் செயல்பட்டு வரும் முகமது பின் ரஷீத் மையம் ஆகும்.
இது, பொதுமக்களுக்கு இஸ்லாமிய கலாச்சாரத்தையும் அதன் சகிப்புத்தன்மையுள்ள போதனைகளையும் கற்பிக்கும் அறக்கட்டளையாகும்.
இது, இஸ்லாமிய மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் பிற மதத்தினருக்கு, இஸ்லாமிய கொள்கைகளை விளக்கி வருகிறது.
துபாயில் வசிக்கும் பல்வேறு சமூகங்களிடையே பொது விழிப்புணர்வை ஏற்படுத்தி இஸ்லாத்தின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளை இந்த மையம் பரப்பி வருகிறது.
சமீபத்தில் இவ்வமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, 2021 ஜனவரி முதல் ஜூன் வரை 2,027 பேர் இஸ்லாமிய அறிவிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்திற்கு மாறியுள்ளனர் என குறிப்பிடப் பட்டுள்ளது.