நான் ஏன் பிறந்தேன் என்பதை இஸ்லாத்தில் உணர்ந்தேன் – பிரபல பாப் பாடகர் நெகிழ்ச்சி!

Share this News:

மக்கா (15 ஜன 2023): பிரபல தென் கொரிய பாப் பாடகரும் யூடியூபருமான தாவூத் கிம், அவர் உம்ரா செய்த பிறகு சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

இஹ்ராமில் உள்ள புகைப்படம் புனித ஹராமின் முன் இருந்து எடுக்கப்பட்டது.அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது அனைத்து கேள்விகளுக்கும் இஸ்லாம் பதிலளித்ததாகவும், அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பூமியில் அவர் தான் அதிர்ஷ்டசாலி என்றும் எழுதியுள்ளார்.

“எனக்கு விருப்பமான மக்காவிற்கு மீண்டும் வந்திருக்கிறேன். இந்த இடம் எனது சொந்த ஊர் போன்று உணர்கிறேன். மிகவும் அமைதியான புண்ணிய பூமியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் நாம் ஏன் பிறந்தோம்? நாம் ஏன் வாழ்கிறோம்? நாம் எங்கே போகிறோம்? போன்ற கேள்விகளுக்கு விடை தேடினேன். என் வாழ்க்கை ஒரு குழப்பமாக இருந்தது. இத்தனைக்கும் இஸ்லாத்தில் விடை கிடைத்தது.

நான் தனியாக இல்லை என்பதை உணர்ந்தேன். யாரோ ஒருவர் என் பக்கத்தில் இருக்கிறார், என்னை நேரான பாதையில் வழிநடத்த முயற்சிக்கிறார். அல்லாஹ் ஒருவன் இருக்கிறான். அவனே எல்லாம் என்பதை இஸ்லாத்தில் உணர்ந்தேன்.” என பதிவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply