கொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் 5 வருடம் சிறைத் தண்டனை!

Share this News:

துபாய் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் அல்லது அந்த நோயின் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலுக்கு (Quarantine) உட்பட வேண்டும் என்றும் அந்த விதிகளை மீறினால் அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரக அரசு எச்சரித்துள்ளது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி உலகத்தின் பல நாடுகளை தாக்கி, உயிர்களை காவு வாங்கி வருகிறது. சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி, இந்தியா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அது பரவுவதை தடுக்க உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகமும் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. நோயாளிகள் அல்லது நோயின் அறிகுறி உள்ள நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. Quarantine எனப்படும் இந்த விதியை மீறினால் 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரக அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அதி வேகத்தில் பரவுவதால் இந்த விவகாரத்தில் பல்வேறு நாடுகளும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.


Share this News:

Leave a Reply