ஜித்தா (28 ஜன 2020): ஜித்தா இந்திய தூதரகத்தில் கடந்த 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின கொடியேற்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சவூதி வெளியுறவுத்துறை அதிகாரி ஹானி காஷிஃப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தவர்களும் இந்நிகழ்ச்சியில்கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திய கன்சுல் ஜெனரல் பேசுகையில், இந்தியா சவூதி அரேபியா இடையேயான உறவுகள் குறித்தும், மெக்கா வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு சவூதி அரசு கொடுக்கும் மதிப்பு வாய்ந்த உபசரிப்புகள் குறித்தும் வாழ்த்தி பேசினார். அரபி மற்றும் ஆங்கில மொழிகளில் இப்பேச்சு அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் இந்திய மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும் இந்திய குடியரசு தின நிகழ்ச்சிகள் காணொளி மூலம் ஒளிபரப்பப்பட்டது.