ரியாத் (20 ஜன 2023): ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது டெர்மினல்கள் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையத்தின் தலைவர் அப்துல்அசிஸ் அல்துஅய்லிஜ் தெரிவித்துள்ளார்.
ரியாத் விமான நிலையத்தில் டெர்மினல்கள் 3 மற்றும் 4 அவ்வப்போது நெருக்கடி ஏற்படுவதால், இதனைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு இந்த மேம்பாட்டுத் திட்டம் உதவும்.
ரியாத் விமான நிலையத்தில் 1, 2 மற்றும் 5 ஆகிய டெர்மினல்கள் விரிவாக்கமும் விரைவில் தொடங்கும்.
வெளிநாட்டு விமான நிறுவனங்களிலிருந்து வரும் விமானங்கள், ஒரு வருடத்திற்கு டெர்மினல் 1ல் இருந்து டெர்மினல் 2க்கு மாற்றப்படும்.
பணிகள் முடிந்ததும், வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்கள் டெர்மினல் எண். 1க்கு மாற்றப்படும். இதற்குப் பிறகு, டெர்மினல் எண் 2 இல் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கும்.