ஜித்தா விமான நிலையத்தில் நெரிசலை நீக்க நடவடிக்கை!

ஜித்தா (22 ஜன 2023): சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா விமான நிலையத்தின் செயல்பாடுகளை எளிதாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ரமலான் மாதத்தில், ஜித்தா விமான நிலையத்தில் பல பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் சரியான நேரத்தில் புறப்பட முடியாமலும், விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமலும் சிரமப்பட்டனர். இச்சம்பவத்திற்குப் பிறகு விசாரணையில் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குழுக்களாக வரும் உம்ரா யாத்ரீகர்களின் தன்மை, அதிக அளவு மற்றும் சாமான்களின் எடை, பணியாளர் எண்ணிக்கை…

மேலும்...

ரியாத் சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம்!

ரியாத் (20 ஜன 2023): ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது டெர்மினல்கள் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையத்தின் தலைவர் அப்துல்அசிஸ் அல்துஅய்லிஜ் தெரிவித்துள்ளார். ரியாத் விமான நிலையத்தில் டெர்மினல்கள் 3 மற்றும் 4 அவ்வப்போது நெருக்கடி ஏற்படுவதால், இதனைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு இந்த மேம்பாட்டுத் திட்டம் உதவும். ரியாத் விமான நிலையத்தில் 1, 2 மற்றும் 5 ஆகிய டெர்மினல்கள்…

மேலும்...

சர்வதேச அளவில் முதலிடத்தைப் பிடித்த கத்தார்!

தோஹா (10 ஆக 2021): உலகின் மிகச்சிறந்த சர்வதேச விமான நிலையங்களில் கத்தாரின் ஹாமத் சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து,  2021-ஆம் ஆண்டுக்கான புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஸ்கை ட்ராக்ஸ் நிறுவனம். அதில் கத்தாரின் ஹாமத் சர்வதேச விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலையம் என்ற பெயரை எடுத்து முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் கத்தார்…

மேலும்...

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த பயங்கரவாதி போலீசில் சரண்!

மங்களூரு (22 ஜன 2020): மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்யா ராவ் என்ற பயங்கரவாதி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான். இருதினங்களுக்கு முன்பு மங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினர் வெடிப்பொருள் ஒன்றை கண்டு பிடித்தனர். அதை பாதுகாப்பாக தொலைவில் எடுத்து சென்று நிபுணர்களை கொண்டு பாதுகாப்பான முறையில் வெடிக்க செய்தனர். மேலும் வெடிகுண்டு வைத்தவன் ஆட்டோவில் வந்து விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து விட்டு தலைமறைவான பயங்கரவாதியை போலீசார் தேடி வந்தனர். வரும்…

மேலும்...

மங்களூரு விமான நிலையத்தில் வெடிப்பொருள் – மர்ம நபருக்கு வலைவீச்சு!

மங்களூரு (20 ஜன 2020): மங்களூரு விமான நிலையத்தில் வெடிப் பொருள் வைத்த நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். விமான நிலைய பாதுகாப்புப் படையினர் வெடிப்பொருள் ஒன்றை கண்டு பிடித்தனர். அதை பாதுகாப்பாக தொலைவில் எடுத்து சென்று நிபுணர்களை கொண்டு பாதுகாப்பான முறையில் வெடிக்க செய்தனர். மேலும் அந்த வெடி பொருளை வைத்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .

மேலும்...

இலங்கை விமான நிலையத்தில் பரபரப்பு – 9 பேர் கைது!

கொழும்பு (20 ஜன 2020): இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையைத்தில் 9 பேரை போலீசார் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பு பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை தேசிய மற்றும் வெளிநாட்டு பிரயாணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விமான நிலையத்திற்குள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும்...