ரியாத் (10 செப் 2021): சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மீண்டும் விமான சேவை இயக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி புக்கிங்குகளை தொடங்கியுள்ளது.
கோவிட் பரவலை தடுக்கும் விதமாக சவூதி அரேபியா கடும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கட்டம் கட்டமாக விமான போக்குவரத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சவூதி துபாய் விமான போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சவூதிக்கு நேரடியாக இதுவரை விமான போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் இந்தியாவிலிருந்து சவூதி செல்பவர்கள் தற்போதைக்கு துபாயை தேர்ந்தெடுக்கலாம்.
சவூதியில் ஏற்கனவே இரண்டு தடுப்பூசி பெற்றவர்கள் வேறொரு நாட்டில் குவாரண்டைன் இல்லாமல் சவூதிக்கு நேரடியாக பயணிக்கலாம். இதனால் துபாய் வழியாக சவூதி செல்பவர்களுக்கு பயணச் செலவு வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது. .