சமுத்திரக்கனி சுனைனா உள்ளிட்டவர்களின் நடிப்பில் நல்ல கதை அமசத்துடன் வெளியாகியுள்ள படம் சில்லுக்கருப்பட்டி.
காதல் அனைத்து உயிர்களுக்கும் உண்டானது. பள்ளிப்பருவத்தில் முளைக்கும் காதல் இங்கே ஓர் பையனுக்கு குப்பை கிடங்கில் உதயமாகிறது. அவன் கையில் தினமும் ஒரு பொருள் கிடைக்கிறது. அது எங்கிருந்து வந்தது என அவன் தேட தொடங்குவது ஒருபக்கம், மறுபக்கம் பொருளுக்கு சொந்தக்காரி பேபி சாராவு அதை தொலைத்த ஏக்கத்தில் திரும்ப கிடைக்குமா என்ற தவிப்பு. கடைசியில் நடப்பது என்ன?? இது ஒருவகை.
அடுத்தது திருமணத்திற்கு தயாராகும் மீம் கிரியேட்டர் இளைஞருக்கு பயமுறுத்தும் வகையில் ஒரு நோய்? இதனால் மனம் உடைந்து போகும் அவனுக்கு இடையில் ஓர் அறிமுகம். அவருடன் பயணிக்கும் அந்த பெண்ணுக்கு காதல் மீது ஓர் அழகான புரிதல். இறுதியில் அந்த இளைஞருக்கு நோய் குணமானதா? காதலின் மீதான புரிதல் என்ன? இது இரண்டாம் வகை.
அடுத்தது நான்காம் வகை. வயதான காலத்தில் யாருக்கும் தொந்தரவு வைக்கக்கூடாது என நினைப்பார்கள். இப்படியான வட்டத்திற்குள் இருக்கும் பெண் லீலா சாம்சன், தன் காதலை நிரூபிக்க திருமணம் செய்யாமல் இருக்கிறார். திடீரென அறிமுகமாகும் துணையற்ற நண்பர் ஸ்ரீராமின் தவறான காதல் அணுகுமுறை அவருக்கு பிரிவை தருகிறது. இந்நிலையில் இருவருக்கும் வாழ்வில் அப்படி என்ன பிரச்சனை? இந்த காதல் ஞாயமானதா?
அடுத்து சமுத்திரகனி மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாகி வேலை வேலை என ஒருவித மனவியாதிக்கு ஆளாகிறார். மனைவியாக குடும்பபெண்ணாக பொருப்புடன் இருக்கும் சுனைனாவுக்கு கணவனுடன் உறவு மீதான ஏக்கம்? அதிசயம் நடந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பு. அது நடந்ததா என்பது மூன்றாம் வகை.
நடிகராகவும், இயக்குனராகவும் சமுத்திரகனி மக்களிடத்தில் மட்டுமல்ல மாண,மாணவிகளின் மனதையும் கவர்ந்தவர். இப்படத்தில் அவர் ஒரு கணவராக கலக்கியிருக்கிறார். குறிப்பாக சதா எதிர்பார்ப்புடன் இருக்கும் மனைவிகளுக்கு அவர் கேட்கும் கேள்விகள் சாட்டையடி கேள்வி? இவரது பேச்சு பல கணவன் மார்களின் பரிதவிப்பு என்பதே தியேட்டரின் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் காட்டுகிறது.
மனைவியாக நடித்துள்ள சுனைனா உடல் இச்சை தேவையை வாய்விட்டு சொல்லமுடியாத உணர்வுடன் சாதாரண குடும்ப பெண் போல இயல்பாக நடித்திருக்கிறார். படத்தில் அவர் கணவருடன் காட்டும் நெருக்கம் ரியல் லைஃப் ஜோடி போல தான். வீட்டுற்குள் முடங்கி கிடக்கும் உணர்வு முகசுளிப்பில் பளிச்சிடுகிறது.
லீலா சாம்சன் உயரிய விருது பெற்ற பரத நாட்டிய நடன கலைஞர். நடிப்பு அலட்டல் இல்லாத ரசனையான பாவனை. தனிமையில் இருந்தாலும் தனக்காக மட்டுமில்லாமல் சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என நடந்து கொள்ளும் பாங்கு பல முதியவர்களுக்கான எனர்ஜி டானிக். அவருடன் வாழ்க்கையில் தான் தொலைத்த ஒரு உயிருக்காக கவலை கொள்ளும் நடிகர் ஸ்ரீராமின் நடிப்பில் எதார்த்தம்.
பேபி சாராவுக்கு தொலைத்த பொருளை பிரிய மனமில்லை என்பதோடு அப்பொருளை பரிசளித்தவர் மீது ஒரு அன்பு. இதுவும் ஒருவித காதல் தான் அழகாக ஃபீல் செய்ய வைக்கிறார்.
மீம் கலைஞராக வரும் மணிகண்டனுக்கு அன்பை கொடுத்து உயிரை மீட்கும் தோழியாக நிவேதா சதீஷ். இருவரின் இயல்பான நடிப்பு பலரின் இதயம் ஈர்க்கிறது.
குப்பைக்கிடங்கில் காதலை துளிர்க்கவிடும் சிறுவனின் குணம் ஒரு சொல்ல முடியாத புதியதொரு உணர்வு.
காதலை நான்கு கோணங்களாக காட்டி இயக்குனர் ஹலிதா ஷமீம் சரியான புரிந்துணர்வு. பிரதீப் குமாரின் பின்னணி இசை காட்சிகளோடு இனிமையான நகர்வு.
அழகி, ஆட்டோகிராஃப் வரிசையில் முதல் காதலை சொல்லும் மற்றும் ஒரு இனிமையான படம்