யார் இந்த முஹம்மது சிராஜ்? – ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற கதை!

Share this News:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய (பிசிசிஐ) இடம் பெற்றுள்ளவர் முஹம்மது சிராஜ் . மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதலாவதாக அவர் பங்கேற்றுள்ளார். ஆனால் அவரது முதல் போட்டியைக் காண அவரது தந்தை உயிரோடு இல்லை.

ஹைதராபாத்தில் ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநரின் மகன், சிராஜ். ஏழாம் வகுப்பில் இருந்தபோது, ​​பள்ளிக்கு இடையேயான போட்டிகளில் வென்ற அணி யில் சிராஜின் பங்கு மிக முக்கியமானது. ,

ஆரம்பம் முதலே சிராஜ் டென்னிஸ் பந்தில் விளையாடுவதை தவிர்ப்பார். அவரது வேகமும், விக்கெட்டுகளை எடுக்கும் திறனும் அவர் பஞ்சாரா ஹில்ஸ் வட்டாரத்தில் நாயகன் ஆனார். நண்பரின் வற்புறுத்தலின் பேரில், கிளப் போட்டிகளில் விளையாடினார். ஹைதராபாத்தின் 23 வயதுக்குட்பட்ட அணியிலும், பின்னர் மூத்த அணியிலும் தன் திறனை வெளிப்படுத்தினார்.

2016-17 ஆம் ஆண்டில், ஹைதராபாத்துக்கான தனது முதல் ஸீஸனில் சிராஜ் சராசரியாக 18.92 சராசரியாக 41 விக்கெட்டுகளை வீழ்த்தினார், காலிறுதியில் மும்பைக்கு எதிராக அவர் எடுத்த ஒன்பது விக்கெட்டுகள் அவரை வேறொரு தளத்திற்கு அழைத்து சென்றது. அதைத் தொடர்ந்து, ஈரானி டிராபியில் அவர் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்காக விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டார்.

2017 ஆம் ஆண்டில், சிராஜை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2.6 கோடி ரூபாய்க்கு தேர்வு செய்தது. அவர் ஆறு ஆட்டங்களில் 10 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு சிராஜ் சென்றார், ஆனால் அங்கு அதே வெற்றியைப் பெறவில்லை. 11 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகள்.மட்டுமே எடுத்தார். .

இருப்பினும், அவரது ஆச்சரியமான பவுன்சர் மூலம் பலரது கவனத்தைப் பெற்றார். 2018 ஆம் ஆண்டில், பத்து முதல் தர ஆட்டங்களில் இருந்து 55 விக்கெட்டுகளை வீழ்த்தினார், சராசரியாக 19.80 மற்றும் ஸ்ட்ரைக் வீதம் 37.9. அதில் தென்னாப்பிரிக்கா ஏ-க்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு ஐந்து விக்கெட்டுகளும், 59 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளும் அடங்கும்.

2020 ஐ.பி.எல்லில், அபுதாபியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஐபிஎல் போட்டியில் இரண்டு மெய்டன்களை வீசிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை சிராஜ் பெற்றார். இந்நிலையில் தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

சிராஜ் ஆஸ்திரேலியா சென்ற பிறகு சிராஜின் தந்தை ஐதராபாத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சிராஜுக்கு பி.சி.சி.ஐ., ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்கியது. அனால் கோவிட் நடைமுறைகள் இருந்ததால் ஆஸ்திரேலியாவிலேயே தங்க சிராஜ் தீர்மானித்தார்.

முகமது சிராஜின் தந்தை ஹைதராபாத்தில் இறந்தபின் ஆஸ்திரேலியாவில் தங்குவதைத் தேர்வுசெய்த நிலையில் கேப்டன் விராட் கோலி இவ்வாறு சொன்னார் :”உ ங்கள் அப்பாவின் கனவுக்கு வலுவாக இருங்கள்.”


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *