ஆன்லைன் மோசடியைத் தடுக்க கத்தாரில் "ஹிம்யான்" கார்டு அறிமுகம்!

ஆன்லைன் மோசடியைத் தடுக்க கத்தாரில் “ஹிம்யான்” கார்டு அறிமுகம்!

தோஹா, கத்தார் (08 ஏப்ரல் 2024) : கத்தார் அரசின் மத்திய வங்கியான Qatar Central Bank  (Himyan) ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கத்தார் நாட்டில் ஆன்லைன் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளில் மோசடி நடப்பதைத்  தடுக்கவும், Mastercard & Visa போன்ற ஜாம்பவான்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவும் இந்த புதிய தொழில் நுட்பத்தை கத்தார் நாடு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹிம்யான் கார்டு முழுக்க…

மேலும்...

சவூதியில் ஆன்லைன் மூலம் வாகனம் பழுதுபார்க்கும் அனுமதி!

ரியாத் (28 டிச 2022): விபத்துக்குள்ளான வாகனத்தை பழுதுபார்ப்பதற்கான அனுமதியை ஆன்லைனில் பெறுவதை சவுதி அரேபியா எளிதாக்கியுள்ளது. வாகன பழுதுபார்ப்பு அனுமதியை அப்ஷர் இயங்குதளம் போர்டல் மூலம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் அதிகமான சேவைகளை மின்னணுமயமாக்குவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து வாகனங்களை பழுதுபார்ப்பதற்கான அனுமதிகள் இனி அப்ஷர் இயங்குதளம் மூலம் வழங்கப்படும் வசதியைப் பயன்படுத்தி, அதில் உள்ள மூன்று படிகளை முடிக்க வேண்டும் என்று அப்ஷர் சேவைத் துறை தெரிவித்துள்ளது….

மேலும்...

ஆன்லைனில் உம்ரா விசா – வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு!

ஜித்தா (21 செப் 2022): வெளிநாடுகளில் இருந்து மக்கா செல்லும் உம்ரா யாத்ரீகர்கள், மக்காம் தளம் மூலம் உம்ரா விசா பெற முடியும் என, ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளி நாடுகளில் இருந்து உம்ராவிற்கு வருபவர்கள் உம்ரா பயணத்தை முன்பதிவு செய்து தங்கள் சொந்த நாடுகளில் இருந்து உம்ரா விசாவை https://maqam.gds.haj.gov.sa/ மின்னணு தளம் மூலம் பெறலாம். https://maqam.gds.haj.gov.sa/ போர்ட்டலில் உள்நுழைந்து தேவையான சேவைகளை முன்பதிவு செய்து விசாவிற்கு விண்ணப்பித்த பிறகு வழங்கப்பட்ட எண்ணைப் பயன்படுத்தி…

மேலும்...

CBSE பள்ளிகளில் ஆன்லைன் பயிற்சி – பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு!

புதுடெல்லி (25 மே 2020): CBSE பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை CBSE நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், CBSE பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணையத்தில் வரம்புமீறிய செயல்கள் நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து ஆன்லைனில் செயல்பாடுகள் குறித்த வழிகாட்டு முறையை CBSE வெளியிட்டுள்ளது. பிறருக்கு பகிரும் புகைப்படங்கள், வீடியோக்களில்…

மேலும்...

1 முதல் 12 வகுப்பு வரை ஆன்லைன் கல்விக்கு புதிய சேனல் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

புதுடெல்லி (17 மே 2020): ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1 முதல் 12 வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான இறுதி கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.. அப்போது பேசிய அவர்,…

மேலும்...