சசிகலா மீது திடீர் பாசமழை பொழியும் ஓபிஎஸ்!

சென்னை (23 மார்ச் 2021): சசிகலா மீது திடீரென பாசமழை பொழிந்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். விருப்பமில்லையென்றபோதிலும் வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளாராக முன்மொழிந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு ஆரம்பம் முதலே இருந்த வந்த நிலையில், எடப்பாடி தன்னை மட்டும் முன்னிலைப்படுத்துவதை ஓபிஎஸ் விரும்பவில்லை. அதன் பின்னணியிலேயே, தனக்கென விளம்பரங்களை கொடுக்கும் ஓபிஎஸ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் சசிகலா மீது ஆரம்பம் முதலே தனக்கு வருத்தம்…

மேலும்...

சசிகலாவுக்கு எடப்பாடி ரகசிய தூது – ஓரங்கட்டப்படும் ஓபிஎஸ்!

சென்னை (06 அக் 2020): சசிகலாவின் விசுவாசமிக்க தொண்டரான எடப்பாடி சசிகலாவின் தலைமையில் அதிமுகவை இயக்க தயாராகி வருவதாகவும், அதற்காக ரகசிய தூதும் விடப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரை யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அதிமுகவிற்கு…

மேலும்...

அம்மாவின் அரசியல் வாரிசு -அனல் பறக்கும் தேனி!

தேனி (05 அக் 2020): நாளை மறுநாள் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேனியில் நாளைய முதல்வர் ஓபிஎஸ் என 100 அடி நீளத்திற்கு பிளக்ஸ் அமைத்து அம்மாவின் வாரிசு என கோஷமிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்ட சபை தேர்தலையொட்டி அரசியல் வியூகங்கள் நகர தொடக்கி விட்டன. களத்தில் அதிமுகவா? திமுகவா? என்ற போட்டியை விட, அதிமுகவில் ஓபிஎஸ்ஸா? ஈபிஎஸ்ஸா? என்ற குழப்பங்கள் தொண்டர்களுக்கிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் 7ஆம் தேதி…

மேலும்...

அதிமுக முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் இல்லையாம் – அப்படின்னா யார்?

சென்னை (03 அக் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளராக சசிகலாவை அறிவிக்க அதிமுக தயாராகிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் சசிகலா தலைமையை அதிமுக ஏற்க தயாராகிவிட்டதாகவும் தெரிகிறது. சசிகலா தலைமையை அதிமுக மூத்த தலைவர்கள் ஏற்க தயாராகி விட்டதாகவும், வருகிற 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளருக்கான அறிவிப்பு அதிமுகவில் எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட குழப்பங்களுக்கு அடுத்து, அக்கட்சியின் நிரந்த பொதுச் செயலாளரானார் ஜெயலலிதா. அதேபோல், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா…

மேலும்...

சசிகலாவுக்கு புகழாரம் அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்டிய ஓபிஎஸ் இபிஸ்!

சென்னை (28 செப் 2020): சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் ,கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர் பரபரப்பான இந்த செயற்குழுவில் முதலமைச்சராக்கியது யார்? என ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் எழுதியுள்ளது. தன்னை முதலமைச்சராக்கியது ஜெயலலிதா என ஓ.பி.எஸ். பேசியதாகவும் இருவரையுமே முதலமைச்சராக்கியது…

மேலும்...

மீண்டும் எடப்பாடி ஓபிஎஸ் யுத்தம் – மதுரை போஸ்டர்களால் பரபரப்பு!

மதுரை (09 செப் 2020): மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அதிமுகவில் மீண்டும் எடப்பாடி, ஓபிஎஸ் யுத்தம் தொடங்கியுள்ளது. மதுரையில் ராஜேந்திர பாலாஜியின் படத்தோடு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் “மக்களின் முதல்வர் எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும்”- எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதைப் படித்த பிறகாவது திருந்தட்டும் என்று மதுரை நகரெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டது. இதற்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பினர் “அரசியலில் முதிர்ச்சி” “அதிகாரத்தில் அடக்கம்” “என்றென்றும் தமிழர் தலைவர் ஓபிஎஸ் வழியில்” என்று…

மேலும்...

கொந்தளித்த அதிமுக – தடுமாறும் பாஜக!

சென்னை (23 ஜன 2020): பெரியார் குறித்த ரஜினியின் கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதன் கூட்டணி கட்சியான பாஜகவோ, ரஜினிக்கு ஆதரவு அளித்து வருகிறது. கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை, உடையில்லாமல், செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும்…

மேலும்...

ஓபிஎஸ் தம்பியின் பதவி பறிப்பு – நீதிமன்றம் உத்தரவு!

தேனி (23 ஜன 2020): துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பியின் ஆவின் தலைவர் பதவியை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்ட ஆவினை நிர்வகிக்க, தலைவராக துணை முதல்வர் ஓபிஎஸ்.,சின் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டார். மேலும், துணை தலைவராக செல்லமுத்து மற்றும் 15 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அம்மாவாசி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையைல் மனு அளித்திருந்தார். அதில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி, நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டும்…

மேலும்...