ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பரபரப்பு வீடியோ வெளியிட்ட அதிமுக பெண் நிர்வாகி!
சென்னை (12 டிச 2022): ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக எடப்பாடி அணியின் பெண் நிர்வாகி தமிழ்ச்செல்வி ராமசாமி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவி்ல் ஒற்றைத் தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து பொதுக்குழுவைக் கூட்டி அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்ற…