கூகுள் தொழில் நுட்பத்தில் கலக்கும் ஓமன் விர்ச்சுவல் டூர்!

கூகுள் தொழில் நுட்பத்தில் கலக்கும் ஓமன் 360 விர்ச்சுவல் டூர்!

மஸ்கட் (05 மார்ச் 2024): ஓமன் நாட்டின் அனைத்து சாலைகளையும், சுற்றுலா தளங்களையும் 360 டிகிரி விர்ச்சுவல் டூர் வியூவில் மேம்படுத்தி வருகிறது ஓமன் அமைச்சகம். ஓமன் நாட்டின் போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (எம்.டி.சி.ஐ.டி.) மேற்பார்வையுடனும், ஓமனின் தேசிய ஆய்வு ஆணையம் மற்றும் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடனும் ஓமன் நாட்டின் அனைத்து சாலைகளையும் விர்ச்சுவல் வியூவில் அமைக்கும் அதிநவீன தொழில் நுட்பத்திற்கான திட்டத்தை கூகுள் செயல்படுத்தி வருகிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே கடந்த…

மேலும்...

பிரமிக்க வைக்கும் கல்ஃப் ரயில்வே – முழுமையான தகவல்கள்!

தோஹா (05 டிசம்பர் 2023): வளைகுடா நாடுகளுக்கான Gulf Co-operation Council இன் 44வது அமர்வு இன்று தோஹாவில் நடைபெறுகிறது. இந்த அமர்வில், வளைகுடா நாடுகளை வலுப்படுத்தும் திட்டங்கள் அலசப்படுகின்றன. வளைகுடா நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. இந்த ஒப்பந்தங்களில் முக்கியமாகக் கருதப்படுவது, வளைகுடா-வின் ஆறு நாடுகளை ஒன்றிணைக்கும் அதிவேக ரயில்வே திட்டமாகும். இதற்கு கல்ஃப் ரயில்வே (Gulf Railway) எனப் பெயரிடப் பட்டுள்ளது. அதிவேக ரயில் திட்டம் –…

மேலும்...

ஒரே விசாவில் இனி ஒட்டு மொத்த வளைகுடா பயணிக்கலாம்!

தோஹா, கத்தார் (09 நவம்பர் 2023):  வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இனி கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்க முடியும். வளைகுடா ஒத்துழைப்பு சபையில் (Gulf Cooperation Council) உள்ள ஆறு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்ற GCC உள்துறை அமைச்சர்களின் 40வது கூட்டத்தின்போது GCC-இன் பொதுச்செயலாளர் ஜாசிம்…

மேலும்...

உலகிலேயே பாதுகாப்பான நாடு எது தெரியுமா?

கத்தார் (15 ஜன 2023): உலகிலேயே சிறந்த வாழ்க்கைத் தரமும், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சூழ்நிலைகளும் கொண்ட நாடுகளின் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தர ஆய்வதில் உலகில் முன்னணி வகிக்கும் Numbeo நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. (இந்நேரம்.காம்) உலகில் 142 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான இந்த பட்டியலில் கத்தார் நாடு முன்னணி வகிக்கிறது. Numbeo எனும் பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் மற்றும்…

மேலும்...

ஒமான் சுல்தான் 121 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை!

மஸ்கட் (13 ஜன 2023): ஓமானில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற 121 கைதிகளை சுல்தான் ஹைதம் பின் தாரிக் விடுதலை செய்தார். அவர் பதவியேற்ற மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்களில் 57 பேர் வெளிநாட்டினர். கடந்த ஆண்டு 229 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஜனவரி 11, 2020 அன்று, சுல்தான் கபூஸின் வாரிசாக சுல்தான் ஹைதம் பின் தாரிக் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றது முதல், ஓமன் நாட்டின்…

மேலும்...

கணவர் திடீர் மரணம் – மனைவிக்கு தெரியாமல் ஒரே விமானத்தில் பயணித்த கணவரின் உடலும் மனைவியும்!

கண்ணூர் (17 மார்ச் 2020): ஓமனில் கணவர் திடீரென மரணம் அடைந்துவிட அங்கிருந்த மனைவிக்கு கணவர் இறந்ததை கூறாமல் ஒரே விமானத்தில் கணவரின் உடலையும் மனைவியையும் நண்பர்கள் அனுப்பி வைத்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ஜாகீர் (30). இவர் 6 வருடங்களாக ஓமனில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஷிபானா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின் ஷிபானாவை ஓமனுக்கே அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே, ஜாகீர்…

மேலும்...

ஓமனிலிருந்து தமிழகத்தில் நுழைந்த கொரோனா வைரஸ்!

சென்னை (07 மார்ச் 2020): ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து துவங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், பல்வேறு நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்த அளவில் இந்த பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது நேற்றைய நிலவரப்படி 31 பேர் இந்த பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தைப் பொருத்தவரை யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அரசு கூறியிருந்தது. எனினும் எச்சரிக்கையாகவே அரசு உள்ளது. இந்நிலையில் ஓமன் நாட்டில்…

மேலும்...

ஓமன் நாட்டில் பலத்த மழை!

மஸ்கட் (16 ஜன 2020): ஓமன் நாட்டில் பலத்த மழை பெய்துள்ளது. ஓமனில் புதன்கிழமை பெய்த மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் 139 மி.மீ. மழை பெய்துள்ளதாக ஓமன் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ அவசர உதவி துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே வியாழன் அன்றும் மழை தொடரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும்...

ஓமன்(மஸ்கட்) அதிபர் மரணம்!

மஸ்கட் (11 ஜன 2020): ஓமன் நாட்டின் அதிபர் சுல்தான் காபூஸ் பின் சயீத் அல் சயீத்(79) உடல் நலக்குறைவால் காலமானார். வளைகுடா நாடுகளில் அதிக ஆண்டுகள் மன்னராக இருந்தவர் என்று பெயர் பெற்ற சுல்தான் காபூஸ், 1970 லிருந்து ஓமன் நாட்டின் மன்னராக இருந்து வந்தவர். இந்தியாவில் படித்த சுல்தான் காபூஸ் முன்னாள் குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மாணவர். சங்கர் தயாள் சர்மா ஓமன் நாட்டிற்கு வந்தபோது, மரபை மீறி நேரடியாக விமான…

மேலும்...