கத்தாரில் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் கால அளவு மாற்றம்!
தோஹா (16 நவ 2021): கத்தாரில் கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெறுவதற்கான தகுதி காலம் குறைக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்து எட்டு மாதங்களுக்குப் பிறகு எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை சுகாதார அமைச்சகம் மாற்றியுள்ளது. அதன்படி தற்போது இரண்டு டோஸ் எடுத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஆறு மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாகக் குறையும் என்ற…
