பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!
பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான ‘கிருஷ்ணா’வில் 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர் இந்த உறுதிமொழியை அளித்தார். நாட்டை ஆபத்தில் ஆழ்த்தும், பன்மைத்துவத்தை அழிக்கும் பாஜகவுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, இது தொடர்பாக மக்களை எச்சரிக்க முன்வந்த எழுத்தாளர்களுக்கு…