தவறான செய்திக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மோடியை பாராட்டியதாக தவறான தகவல் வெளியிட்டதற்காக இந்நேரம் டாட் காம் மன்னிப்புக் கோரி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. வேறொரு தளத்தில் வந்த செய்தியை சோர்சாக வைத்து இந்த செய்தி வெளியிடப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் செய்தியில் முழு விவரம் அறிய தந்ததற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு நன்றி. inneram

மேலும்...

காதர் மொய்தீன் மீது பொய்யான பரப்புரை – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளக்கம்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் குறித்து பொய்யான பரப்புரை வந்துள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி-யின் தேசிய தலைவர் K.M.காதர் முகைதீன் அவர்கள் ஜி-20 மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அதை அறிந்த சில நபர்கள் தவறான செய்தியை சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த செய்தியை யாரும்…

மேலும்...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பாராட்டு!

சென்னை (09 செப் 2020); ‘தி.மு. கழகத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் கழகப் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு ஆகியோருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (09.09.2020) விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: “திரு. துரைமுருகன் அவர்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனங்கவர்ந்த தம்பியாக அதிகமதிகம் அவருடனேயே உடனிருந்து வலம் வந்தவர். கழகத்தின் கொள்கை கோட்பாடுகளில் சமரசமற்ற ஆழ்ந்த பிடிப்புள்ளவராக,…

மேலும்...

இலங்கை எம்.பி. ரவூஃப் ஹக்கீம் வெற்றிக்கு காதர் மொகிதீன் வாழ்த்து!

திருச்சி (13 ஆக 2020): இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் எம்.பி. வெற்றிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து காதர் மொய்தீன் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது : “நடைபெற்று முடிந்துள்ள இலங்கை பொதுத் தேர்தலில் தாங்கள் கண்டி மாவட்ட தொகுதியிலிருந்து மக்கள் பிரதிநிதியாக சிறப்பான வெற்றி பெற்றமைக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். இத்தேர்தலில் ஜனநாயக மக்கள் சக்தி என்ற…

மேலும்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி – காதர்மொய்தீன் அறிக்கை!

சென்னை (15 ஜூலை 2020): ஆன்மீக சுற்றுலா வந்து சிறையிலடைக்கப்பட்டவர்கள் தற்போது ஹஜ் இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிட்டமைக்காக தமிழக முதல்வருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் நன்றியினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து (15.07.2020 புதன்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்திற்கு ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்த இந்தோனேஷியா, மலேசியா, பங்களாதேஷ், பிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 129 முஸ்லிம் சுற்றுலா பயணிகளை தமிழக அரசு கைது…

மேலும்...

மசூதிகளில் நோன்பு கஞ்சி விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் – காதர் மொய்தீன் கோரிக்கை!

சென்னை (18 ஏப் 2020): மசூதிகளில் ரமலான் நோன்பு கஞ்சி விநியோகிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளித்து வருகின்றோம்.முஸ்லிம்கள் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதம் ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் 14 மணி நேரம் உண்ணாமல்,…

மேலும்...

விஷக்கிருமிகளோடு விஷப்பிரச்சார மீடியாக்கள் – காதர் மொகிதீன் கடும் கண்டனம்!

சென்னை (12 ஏப் 2020): விஷக்கிருமி பரவலுக்கு எதிராகப் போராடும் இத்தருணத்தில் விஷக் கருத்துக்களை பரப்பி விவாதித்துக் கொண்டிருக்கும் ஊடகங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “உலகத்தையே பேரிடராக அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய கொரோனா வைரஸ் கிருமித் தொற்று பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதன்படி நமது இந்திய நாட்டில் மத்திய…

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல – தலைமை செயலருக்கு முஸ்லிம் லீக் பதிலடி!

சென்னை (13 மார்ச் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டி இந்திய யூனியன் முஸ்லிம்லீக், தலைமை செயலருக்கு கோரிக்கை வைத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக தலைமை செயலர் அழைப்பு விடுத்திருந்தார். அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்கும் விதமாக வரும் 14 மார்ச் 2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், தமிழக தலைமை செயலகம் பழைய…

மேலும்...