சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய குழந்தை மரணம்!

ரியாத் (29 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுமாத இந்தியக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹசிம் மற்றும் அவரது மனைவி ஜார்யா, ஆறுமாத குழந்தை அர்வா, மகன்கள் அயன் மற்றும் அஃப்னான் மற்றும் ஹசிமின் மாமியார் நஜ்முன்னிசா ஆகியோர் சவூதியில் உம்ரா செய்துவிட்டு அல்கோபரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். ரியாத்தில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள அல்…

மேலும்...

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த பிரசவம்!

புதுடெல்லி (05 டிச 2022): ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்கு நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் சிப்ரமாவ் நோக்கி சென்று கொண்டிருந்த மாநில சாலைப் பேருந்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. டிரைவர் உடனடியாக பேருந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பேருந்திலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து பெண்ணின் கணவர் சோமேஷ் கூறுகையில் “பஸ் டிரைவரும் நடத்துனரும்…

மேலும்...

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

ஐதராபாத் (05 டிச 2022): தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி ஒரு வயது சிறுவன் உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் நெகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த படாவத் மாலு கவிதா மகன் மணிகண்டா (1) என்ற குழந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை விளையாடுவதற்காக பெற்றோர் பூஜைக்காக வைத்திருந்த தேங்காய் துண்டை கொடுத்துள்ளனர். குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது தேங்காய் துண்டை திண்றுள்ளது. அப்போது தேங்காய் துண்டு குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ளது. குழந்தை அலறல் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்….

மேலும்...

மருத்துவர்களின் அலட்சியம் – குழந்தைக்கு 70 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (23 அக் 2022): குஜராத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் பார்வை இழந்த குழந்தைக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் சுனிதா சவுத்ரி என்ற பெண்ணுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நவ்சாரியில் உள்ள அரசு மருத்துவமனையில் 28 வாரங்களில் குறை மாத்தில் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தை 1,200 கிராம் எடையுடன் இருந்தது. 42 நாட்கள் ஐசியூவில் தங்கியிருந்த பிறகு குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்தூக்கு கொண்டு…

மேலும்...

வீட்டில் பிரசவம் – குழந்தை மரணம்!

கோவை (07 டிச 2021): வீட்டில் சுயமாக பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கோவை செட்டிவீதியில் உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார், நகை பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி புண்ணியவதி. விஜயகுமார் – புண்ணியவதி தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந் த நிலையில் 4-வது முறையாக கர்ப்பமானதால் பிரசவம் தொடர்பாக அலட்சியப் போக்கே இருந்து வந்துள்ளது. புண்ணியவதியும் மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது. நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவ வலி எடுத்ததும் மருத்துவமனைக்குச்…

மேலும்...

இறந்துட்டதா சொன்னாங்க ஆனால் இதயம் துடிக்குது – தேனி மருத்துவமனையில் பரபரப்பு!

தேனி (04 ஜூலை 2021): தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் குழந்தை உயிருடன் இருந்தது பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம், தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த பிளவேல்ராஜா-ஆரோக்யமெரி தம்பதியினருக்கு மூன்றாவதாக குழந்தை பிறந்திருக்கிறது. ஆறுமாத குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகம் தரப்பு இறப்பு சான்றிதழுடன் குழந்தையின் உடலையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளது. சான்றிதழுடன் குழந்தையை மயானத்திற்கு தூக்கிச் சென்ற போது குழந்தைக்கு…

மேலும்...

இறந்த தாயை எழுப்பும் குழந்தை – வைரலான குழந்தைக்கு உதவும் ஷாரூக்கான் அறக்கட்டளை!

மும்பை (01 ஜூன் 2020): பீகார் முசாபர்பூர் ரயில்வே சேஷனில் இறந்த தாயை எழுப்ப முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில் அந்த குழந்தைக்கு உதவ நடிகர் ஷாருக்கானின் ‘மீர் அறக்கட்டளை’ முன்வந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு செல்வதில் மிகவும் அவதிபட்டனர். பலர் கால்நடையாக நடந்தே ஊருக்கு சென்றனர். இதில் பலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். அந்த வகையில் தாமதமாக அரசு அறிவித்த…

மேலும்...

100 கிலோ மீட்டர் நடந்த புலம்பெயர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்!

லூதியானா (26 மே 2020): 100 கிலோமீட்டர் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் பிந்தியா மற்றும் அவருடைய கணவர் ஜதின் ராம் ஆகியோர் வேலை செய்துவந்துள்ளனர். 20 வயதைக் கடந்திருக்கும் அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா ஊரடங்கின் காரணமாக 50 நாள்களுகும் மேலாக வேலையின்றி தவித்த அவர்கள், சொந்த ஊர் செல்வதற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் நடக்கத் தொடங்கினர். 9 மாத கர்ப்பிணி…

மேலும்...

கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த நான்கு வயது குழந்தை படுகொலை – நெல்லையில் பயங்கரம்!

நெல்லை (24 பிப் 2020): நெல்லையில் கள்ளக்காதலியின் 4 வயது பாலகனை பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு, தப்பியோடிய கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிவராத்திரியில் நடைபெற்ற பகீர் சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி… நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டானா பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோனி பிரகாஷ் – தீபா தம்பதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்தான். எல்.பி.ஜி டேங்கர் லாரி ஓட்டுநராக பணியாற்றி…

மேலும்...

உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்ட மாணவியை பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி!

திருச்சி (13 பிப் 2020): திருச்சியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றில் இறந்த நிலையில் இருந்த ஐந்து மாத குழந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கூறப்படுவதாவது: திருச்சி பீமநகரைச் சோ்ந்த 21 வயது மாணவி, தனியாா் கல்லூரியொன்றில் பி.காம். படித்து வருகிறாா். இவருக்கும் எதிா் வீட்டைச் சோ்ந்த இளைஞருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், இந்த விவரத்தை தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். மாணவியின் படிப்பு முடிந்த பின்னா் திருமணத்தை…

மேலும்...