மறைக்கப்படும் கொரோனா மரணங்கள் – ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை (26 ஜூலை 2020): சென்னையில் கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், சென்னையில் 63% கொரோனா மரணங்களை எடப்பாடி பழனிசாமி அரசு மறைத்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் “கட்டமைப்பு வசதி இல்லாத மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்களை அரசு மறைத்திருக்கிறதோ?” எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மரணக்கணக்கில் உள்ள தவறுகளை திருத்த ஏற்கனவே 39 கமிட்டி உள்ள…

மேலும்...

மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சவுஹானுக்கு கொரோனா தொற்று உறுதி!

போபால் (25 ஜூலை 2020): மத்திய பிரதேச முதல்வர் ஷிவராஜ் சவுஹானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்...

கொரோனா பரவலால் தடுமாறும் தமிழகம் – ஒரே நாளில் 6472 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை (23 ஜூலை 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதில் 63 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 25 பேர் தனியார் மருத்துவமனைகளிலும்…

மேலும்...

இந்தியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று – ஒரே நாளில் 45,720 பேர் பாதிப்பு!

புதுடெல்லி (23 ஜூலை 2020): இந்தியாவில் கொரோனா தொற்றால் உச்சபட்சமாக ஒரே நாளில் 45,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 12 லட்சத்தை கடந்து, 12,38,635 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் அதிகபாதிப்பு பதிவாகியுள்ள 5 மாநிலங்களின் பட்டியிலில், மகாராஷ்டிரா (10,576), ஆந்திர பிரதேசம் (6,045), தமிழகம் (5,849), கர்நாடகா (4,764) உத்தர பிரேதசம் (2,300) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில்…

மேலும்...

கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு!

சென்னை (23 ஜூலை 2020): கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகளை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தமிழகத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், கலை அறிவியல் கல்லூரி முதுகலை படிப்புகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகளை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது. அதேவேளை மாணவர்களின் அரியர்கள் ரத்து செய்யப்படவில்லை என்றும், மாணவர்கள் தங்களது அரியர் பேப்பர்களை, கல்லூரி…

மேலும்...

பிளாஸ்மா தானம் மூலம் கொரோனா சிகிச்சை வெற்றி – அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்!

சென்னை (23 ஜூலை 2020): தமிழகத்தில் பிளாஸ்மா தானம் மூலம் கொரோனா சிகிச்சை வெற்றி அடைந்திருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்து பேசிய விஜயபாஸ்கர், “பிளாஸ்மா நன்கொடையாளர்கள் 2 பேர் இன்று பிளாஸ்மா தானம் அளித்து தொடங்கியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்த பிளாஸ்மா வங்கியில் 7 பேர் தானம் அளிக்கக் கூடிய வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன….

மேலும்...

இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த கொரோனா நோயாளி!

ஐதராபாத் (22 ஜூலை 2020): கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 63 வயதான அஃப்சர்கானுக்கு இருதய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ், பராமரிப்பு மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை மற்றும் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதீக் பட்நகர், இந்தியாவின் கொரோனா பாதித்து மீண்ட நோயாளிக்கு முதல் இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளி அஃப்சர்கான், பல நாட்களாக நெஞ்சு வலியால் அவதி பட்டு வந்துள்ளார்….

மேலும்...
IPL 2020

2020 ஐபிஎல் போட்டி நடக்கப் போவது எங்கே..?

புதுடெல்லி (21 ஜூலை 2020): “ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” என்று ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய்,…

மேலும்...

தமிழக சுகாதாரத்துறை செயலர் மனைவி, மகன் உட்பட நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (21 ஜுலை2020): தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மனைவி, மகன் உட்பட குடும்பத்தினர் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் மாமியார் உட்பட நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள், கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...

கொரோனா: சென்னையில் படிப்படியாக குறைவு – மற்ற மாவட்டங்களில் தொடரும் அதிகரிப்பு

சென்னை (21 ஜூலை 2020): கொரோனா தொற்று சென்னையில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிகரித்தபடி உள்ளன. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

மேலும்...