ஜூன் 30 க்கு பிறகும் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு!
சென்னை (26 ஜூன் 2020): தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜூன் 30 க்குப் பிறகும் ஊரடங்கு தொடரலாம் என்ற கருத்து நிலவுகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3645 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது. இந்த…
