சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

Share this News:

புதுடெல்லி (25 ஜூன் 2020): சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த மாதம் 18ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்திருந்தனர். இந்ந மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலைமை சீரடைந்தால் 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.


Share this News: