இந்தியாவில் ஒரே நாளில் 47,262 பேருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (24 மார்ச் 2021) இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,34,058 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை…

மேலும்...

ஏற்கனவே கொரோனா பாதித்த அமைச்சருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு!

மும்பை (24 மார்ச் 2021): ஹாராஷ்ட்ரா சமூகநீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மஹாராஷ்ட்ராவில்தான் அதிக அளவிலான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 30,535 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மஹாராஷ்ட்ரா அரசு, அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தநிலையில் மஹாராஷ்ட்ரா சமூகநீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, இரண்டாவது முறையாக…

மேலும்...

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!

சென்னை (23 மார்ச் 2021): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், 4 வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று (மார்ச்.,22) 1385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 8.47 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.சென்னை,கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர் பகுதியில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 659 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 47 ஆயிரத்து 139 ஆக உள்ளது.இன்று மட்டும் கொரோனா…

மேலும்...

ஒரே நிறுவனத்தில் 40 பேரை துவம்சம் செய்யும் கொரோனா!

சென்னை (22 மார்ச் 2021): சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை கந்தன்சாவடி, தரமணி, பெருங்குடி ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வரக்கூடிய தனியார் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய நபர்களில் 2 பேருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் அந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பரிசோதனையின் முடிவில் 40…

மேலும்...

கொரோனா பரவலால் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடையா? – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

சென்னை (22 மார்ச் 2021): கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. , தேர்தல் பிரச்சாரங்களின் போது முக கவசம் அணிவது, தனி மனித விலகலை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது….

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 46 951 பேருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (22 மார்ச் 2021): இந்தியாவில் ஒரே நாளில் 46 951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 212 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் மீண்டும் பரவி வருகிறது. இன்று புதிதாக 46,951 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,16,46,081 ஆக உயர்ந்தது. புதிதாக 212 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,59,967 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 21,180 பேர் குணமடைந்துள்ளனர்….

மேலும்...

தஞ்சையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!

தஞ்சாவூர் (21 மார்ச் 2021): தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்து இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது…

மேலும்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று!

இஸ்லாமாபாத் (20 மார்ச் 2021): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மருத்துவர் ஃபைசல் சுல்தான் அறிவித்துள்ளார். மேலும் இம்ரான்கான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ஃபைசல் சுல்தான் தெரிவித்தார். பாகிஸ்தானிலும் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் பிரதமர் இம்ரான்கான்ன் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

இந்தியாவில் ஒரேநாளில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (20 மார்ச் 2021): இந்தியாவில் ஒரே நாளில் 40 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா பரவல், கடந்த ஒரு மாத காலமாக மீண்டும் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், பஞ்சாப், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை அதிரடியாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் வெகுநாட்களுக்‍கு பிறகு கொரோனா தினசரி…

மேலும்...

கொரோனா பரவல் – ஹாட் ஸ்பாட்டாகும் தஞ்சாவூர் மாவட்டம்!

தஞ்சாவுர் (18 மார்ச் 2021); கடந்த சில மாதங்களாக, தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், மக்களின் அலட்சியப்போக்கு மற்றும் முகக்கவசம் அணியாமல் இருப்பது, கொரோனா விதிகளை பின்பற்றாமல் இருப்பது போன்றவற்றால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கும்பகோணத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனேவே, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை , பட்டுக்கோட்டை உள்ளிட்ட பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு கொரோனா தொற்று…

மேலும்...