மீண்டும் நடந்த பிளஸ் டூ பொதுத்தேர்வு!-ஏராளமான மாணவர்கள் மறுபடியும் ஆப்சென்ட்!

சென்னை (28 ஜூலை 2020): 327 மாணவர்கள் தேர்வுக்கு வராமல் நேற்று பிளஸ் டூ மறு பொதுத்தேர்வு நடைபெற்றது. பிளஸ்-டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிநாள்(மார்ச் 24-ந்தேதி) தேர்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளில் சிலர் பங்குபெறமுடியவில்லை என்ற தகவல் வெளியானது. தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி, மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு நேற்று (திங்கட்கிழமை)…

மேலும்...

டொனால்ட் டரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்!

வாஷிங்டன் (28 ஜூலை 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்பு ஓ’பிரையன் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவர் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வீட்டில் இருந்தபடியே கவனித்து வருகிறார். ஓ’பிரையன் சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து திரும்பினார், இங்கிலாந்து,…

மேலும்...

கொரோனாவிலிருந்து மீண்டது எப்படி?? – நடிகர் விஷால் பரபரப்பு தகவல் :வீடியோ!

சென்னை (26 ஜூலை 2020): கொரோனா வைரஸிலிருந்து மீண்டது குறித்து நடிகர் விஷால் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் அவரும், அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையும், அதிலிருந்து எப்படி மீண்டார்? என்பது குறித்தும் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”எனது தந்தைக்கு 83 வயதாகிறது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு செய்யப்பட்ட கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என வந்தது. எனினும் அவரை…

மேலும்...

ரேஷன் கடைகளில் நாளை (திங்கள்) முதல் இலவச முகக்கவசம் -முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

சென்னை (26 ஜூலை 2020): தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகளில் நாளை முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படுகிறது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் முகக்ககவசம் அணிவது அவசியமாகப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து…

மேலும்...

மறைக்கப்படும் கொரோனா மரணங்கள் – ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை (26 ஜூலை 2020): சென்னையில் கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், சென்னையில் 63% கொரோனா மரணங்களை எடப்பாடி பழனிசாமி அரசு மறைத்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் “கட்டமைப்பு வசதி இல்லாத மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்களை அரசு மறைத்திருக்கிறதோ?” எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மரணக்கணக்கில் உள்ள தவறுகளை திருத்த ஏற்கனவே 39 கமிட்டி உள்ள…

மேலும்...

மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சவுஹானுக்கு கொரோனா தொற்று உறுதி!

போபால் (25 ஜூலை 2020): மத்திய பிரதேச முதல்வர் ஷிவராஜ் சவுஹானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்...

பிளாஸ்மா தானத்துக்கான தகுதி பரிசோதனை முகாம்-முதன் முறையாக சென்னையில் அறிமுகம்

சென்னை (24/07/2020):தமிழகத்தில் கொரோனா கோவிட்-19 நோய் தொற்றின் காராணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நோய் தொற்றினை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மக்களை கொண்டு பெறப்படும் பிளாஸ்மா தானத்தின் மூலம் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்காக சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா பிரித்தறியும் எந்திரம் தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் …

மேலும்...

கொரோனா பரவலால் தடுமாறும் தமிழகம் – ஒரே நாளில் 6472 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை (23 ஜூலை 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதில் 63 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 25 பேர் தனியார் மருத்துவமனைகளிலும்…

மேலும்...

இந்தியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று – ஒரே நாளில் 45,720 பேர் பாதிப்பு!

புதுடெல்லி (23 ஜூலை 2020): இந்தியாவில் கொரோனா தொற்றால் உச்சபட்சமாக ஒரே நாளில் 45,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 12 லட்சத்தை கடந்து, 12,38,635 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் அதிகபாதிப்பு பதிவாகியுள்ள 5 மாநிலங்களின் பட்டியிலில், மகாராஷ்டிரா (10,576), ஆந்திர பிரதேசம் (6,045), தமிழகம் (5,849), கர்நாடகா (4,764) உத்தர பிரேதசம் (2,300) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில்…

மேலும்...

பிளாஸ்மா தானம் மூலம் கொரோனா சிகிச்சை வெற்றி – அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்!

சென்னை (23 ஜூலை 2020): தமிழகத்தில் பிளாஸ்மா தானம் மூலம் கொரோனா சிகிச்சை வெற்றி அடைந்திருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்து பேசிய விஜயபாஸ்கர், “பிளாஸ்மா நன்கொடையாளர்கள் 2 பேர் இன்று பிளாஸ்மா தானம் அளித்து தொடங்கியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்த பிளாஸ்மா வங்கியில் 7 பேர் தானம் அளிக்கக் கூடிய வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன….

மேலும்...