இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த கொரோனா நோயாளி!

ஐதராபாத் (22 ஜூலை 2020): கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 63 வயதான அஃப்சர்கானுக்கு இருதய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ், பராமரிப்பு மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை மற்றும் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதீக் பட்நகர், இந்தியாவின் கொரோனா பாதித்து மீண்ட நோயாளிக்கு முதல் இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளி அஃப்சர்கான், பல நாட்களாக நெஞ்சு வலியால் அவதி பட்டு வந்துள்ளார்….

மேலும்...

தமிழக சுகாதாரத்துறை செயலர் மனைவி, மகன் உட்பட நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (21 ஜுலை2020): தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மனைவி, மகன் உட்பட குடும்பத்தினர் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் மாமியார் உட்பட நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள், கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...

கொரோனா: சென்னையில் படிப்படியாக குறைவு – மற்ற மாவட்டங்களில் தொடரும் அதிகரிப்பு

சென்னை (21 ஜூலை 2020): கொரோனா தொற்று சென்னையில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிகரித்தபடி உள்ளன. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

மேலும்...

மருத்துவமனைகளின் அலட்சியம் – சாதாரண நோயாளிகளும் பலியாகும் பரிதாபம்!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் இதுவரை 26,273 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 671 உயிரிழந்துள்ளனர். இதுவரை 6,53,751 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 17,994 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது இப்படியிருக்க அரசின் உத்தரவால் பெரும்பாலான கொரோனா…

மேலும்...

பிளாஸ்மா கொடை அளித்த முஸ்லிம்கள்;மீண்ட கொரோனா நோயாளிகள்!

மலப்புரம் (17 ஜூலை 2020): கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அளித்த பிளாஸ்மா மூலம் 32 கொரோனா நோயாளிகள் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதுகுறித்து மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியின் கோவிட் 19 மருத்துப் பிரிவின் உயர் அதிகாரி, டாக்டர் ஷினாஸ் பாபு கூறுகையில், “ஏற்கனவே முஸ்லிம்கள் வழங்கிய பிளாஸ்மா மூலம் 32 பேர் பலனடைந்துள்ளனர். மேலும் 250 முஸ்லிம்கள் தங்களது பிளாஸ்மாவை தானமாக அளிக்க முன்வந்துள்ளனர்.” என்றார். மேலும் ,”எங்கள் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக வருபவர்கள் அனைவரையும்…

மேலும்...

சென்னையில் குறையும் ஆபத்து!

சென்னை (17 ஜூலை 2020): ‘சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் குறையும்’ என்று கணித அறிவியல் நிறுவனம் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூலை 10 மற்றும் 14ம் தேதி இடையே சென்னை மாநகரில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை சுட்டிக் காட்டி கணித அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், ஒரு நபர் மூலம் எத்தனை நபர்களுக்கு தொற்று பரவுகிறது என்ற கணக்கெடுப்பை நடத்தி ஆர் வேல்யூ என்று மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி, தொற்று பரவல்…

மேலும்...

மரணம் பற்றி தெரிய மரணித்துதான் பார்க்க வேண்டுமா? – முதல்வர் மீது கமல் கட்சி செயலர் காட்டம்!

சென்னை (16 ஜூலை 2020): நம்மவர் மீது விழுந்து பிராண்டி உங்கள் இயலாமையை தீர்த்துக் கொள்ள முயலாதீர்கள்” என்று எடப்பாடி பழனிச்சாமி மீது மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சேலத்தில் செய்தியாளர்களிடம் ‘கொரோனா பற்றி கமலுக்கு ஒன்றும் தெரியாது’ என தெரிவித்துள்ள தமிழக முதல்வர் அவர்களே… ஒருவருக்கு மரணத்தின் வலி தெரிய வேண்டுமென்றால் மரணித்துப் பார்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அது போல கொரோனா நோய் தொற்று…

மேலும்...

92 தப்லீக் ஜமாஅத்தினருக்கு ஜாமீன்-டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (16 ஜூலை 2020): விசா நடைமுறைகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்ட 92 இந்தோனேசிய தப்லீக் ஜமாத்தினருக்கு டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடைபெற்ற கூட்டத்தில் , இந்தோனேசியாவை சேர்ந்த 92 தப்லீக் ஜமாத்தினரும் பங்கு பெற்றனர். இவர்கள் மீது விசா நடைமுறைகளை மீறியதாகவும், கொரோனா பரவிய நேரத்தில் சட்ட விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் சிறையிலடைக்கப்பட்டு மூன்று…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 29,429 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (15 ஜூலை 2020): இந்தியாவில் ஒரே நாளில் 29,429 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவில் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 582 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும்...

சவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்!

ரியாத் (14 ஜூலை 2020): சவூதில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். உலகை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் சவூதிஅரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் சமீப காலமாக சவூதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும் மீள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளன. அந்த வகையில் இதுவரையிலான அதிகபட்சமாக இன்று (14 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை) 7,718 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும் 2692…

மேலும்...