சசிகலா தலைமையில் மீண்டும் அதிமுக – பச்சை கொடி காட்டும் ஓபிஎஸ்!

சென்னை (24 மார்ச் 2021): தேர்தலுக்குப் பிறகு சசிகலா தலைமையில் அதிமுக இயங்க வாய்ப்பு உள்ளதாக நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் எண்ணமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தால் கட்சியில் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ்., “என்னை பொருத்தவரையில், மனிதாபிமானம் அடிப்படையில் பார்த்தால் அவர் நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார். ஒரு தனிப்பட்ட நபருக்காகவோ,…

மேலும்...

சசிகலா மீது திடீர் பாசமழை பொழியும் ஓபிஎஸ்!

சென்னை (23 மார்ச் 2021): சசிகலா மீது திடீரென பாசமழை பொழிந்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். விருப்பமில்லையென்றபோதிலும் வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளாராக முன்மொழிந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு ஆரம்பம் முதலே இருந்த வந்த நிலையில், எடப்பாடி தன்னை மட்டும் முன்னிலைப்படுத்துவதை ஓபிஎஸ் விரும்பவில்லை. அதன் பின்னணியிலேயே, தனக்கென விளம்பரங்களை கொடுக்கும் ஓபிஎஸ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் சசிகலா மீது ஆரம்பம் முதலே தனக்கு வருத்தம்…

மேலும்...

சசிகலாவுடன் இணையும் முக்கிய அரசியல் பிரபலங்கள் – கலக்கத்தில் எடப்பாடி!

சென்னை (24 பிப் 2021): வி.கே சசிகலாவை முக்கிய அரசியல் பிரபலங்கள் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவை சந்தித்தார். அதேபோல், திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் அமீர் ஆகியோரும் சசிகலாவை சந்தித்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரமும், கட்சிகளுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையும் சூடுப்பிடித்துள்ள நிலையில், சசிகலாவை சரத்குமார், சீமான் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சந்தித்திருப்பது முக்கியத்துவம்…

மேலும்...

திமுகவை வீழ்த்த எடப்பாடியுடன் கைகோர்க்க சசிகலா திட்டம்!

சென்னை (09 பிப் 2021): எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எதிரி அல்ல திமுகவே எதிரி என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழக் கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி.டி.வி. தினகரன் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கட்சியின் பொதுச்செயலாளரை பார்க்க வந்த நிர்வாகிகளை நீக்குவது என்பது விந்தையாக உள்ளது. உண்மைக்காக போராடுபவர்கள் நிச்சயம் எங்களுடன் தான் வருவார்கள்….

மேலும்...

சசிகலாவின் பலே ஐடியா – சினிமாவை விஞ்சிய டிவிஸ்ட்!

சென்னை (08 பிப் 2021): சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு முதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிறகு விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி கொண்டிருந்தார் சசிகலா. சசிகலா பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி இன்று புறப்பட்டார். காலை 10.30 மணியளவில் தமிழக எல்லைக்குள் வந்த அவருக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக கொடியுடன் பயணம் மேற்கொள்ள கூடாது என சசிகலாவை தமிழக போலீசார் எச்சரித்திருந்த நிலையில்…

மேலும்...

சசிகலா பின்னால் 50 எம்எல்ஏக்கள் – பீதியில் எடப்பாடி தரப்பு!

சென்னை (04 பிப் 2021): சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகியுள்ள சசிகலாவுக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக தினகரன் தரப்பு தெரிவித்து வருகிறது. பெங்களூரில் தங்கியிருக்கும் சசிகலா பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் வருகைதரவிருக்கிறார். அவருக்கு 50 எம்எல்ஏக்களும் ஆறு அமைச்சர்களும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை மெரினாவில் கடலே தெரியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதப் போவதாக தினகரன் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கொங்கு மண்டல எம்எல்ஏ ஒருவர் 50 லட்சம் ரூபாய் வெள்ளி வாள் பரிசளிக்கஉள்ளதாகவும்…

மேலும்...

சசிகலா வரும் காரில் அதிமுக கொடி – அதிர்ச்சியில் எடப்பாடி!

சென்னை (31 ஜன 2021): பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து சென்னை வரும் சசிகலாவின் காரில் அதிமுக கொடி பறப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக கடந்த 20 -ம் தேதி லேசான கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்தவர் மருத்துவமனையில் இருந்தே நேரடி விடுதலை செய்யப்பட்டார். இதற்கான ஒப்புதலும் சிறைதுறை சார்பாக மருத்துவமனை…

மேலும்...

அமமுக, அதிமுக இணைப்பு – எடப்பாடிக்கு கல்தா: சசிகலா வருகைக்குப் பிறகு டிவிஸ்ட்!

சென்னை (30 ஜன 2021): சசிகலா விடுதலையாகியுள்ள நிலையில் அமமுக, அதிமுக மீண்டும் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனை இன்றைய நமது எம்ஜிஆர் கட்டுரையும் தெளிவுபடுத்தியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், கொரோனா பாதிப்பால் பெங்களூருவிலுள்ள விக்டோரியா அரசு மருத்துமனையில் தொடர் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்தநிலையில், சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப உள்ளநிலையில், எடப்பாடி பழனிசாமியையும், பா.ஜ.கவையும் கடுமையாக சாடி நமது…

மேலும்...

சசிகலாவுக்கு கொரோனா உறுதி!

பெங்களூரு (21 ஜன 2021): சிகலாவுக்கு கோரோனா உறுதிக்கியுள்ள நிலையில் அவரது உடல் நிலை மோசமான நிலையில் உள்ளதால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு இன்று நடத்தப்பட்ட ஆர்டி பிசிஆர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையிலுள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார். சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  அவரது விடுதலை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. D

மேலும்...

சசிகலாவுக்கு கொரோனா? – மருத்துவமனையில் அனுமதி!

பெங்களூரு (20 ஜன 2021): பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா திடீரென காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சாதாரண சுவாச கோளாறு தான் என தெரிவித்தனர். இதனை அடுத்து , பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலை ஆக்கவுள்ளார் என்பது…

மேலும்...