அமெரிக்காவில் அமேஸான் ஊழியருக்கு கரோனோ வைரஸ் – சியாட்டிலில் 9 பேர் பலி!
அமெரிக்காவில் சியாட்டில் நகரில் உள்ள அமேஸான் நிறுவன ஊழியரை கரோனோ வைரஸ் தாக்கியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் தன் ஊழியர்களுக்குத் தகவல் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி, உடல்நலம் சரியில்லை என்று அந்த ஊழியர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் வேலைக்கு வரவில்லை. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரை COVID-19 கரோனோ வைரஸ் தாக்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தகவல் மார்ச் 3ந் தேதி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அத்தகவல் கூறுகிறது. தடுப்புக்காப்பில் உள்ள அந்த ஊழியருக்குத் தேவையான…