சியாட்டில் (29 பிப் 2020):சியாட்டிலில் உள்ள எவரெட் நகரப் பகுதியில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரை கொரோனா COVID-19 வைரஸ் தாக்கியுள்ளதாக அம்மாவட்டச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மேலும், அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் மாணவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இதை நாங்கள் மிகவும் தீவிரமாகக் கையாண்டு வருகிறோம். பள்ளிக்கூடத்தில் அவர் தொடர்பு கொண்ட மாணவர்களுக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சுகாதாரத் துறையின் கண்காணிப்புடன் 14 நாள்கள் வீட்டிலேயே இருப்பார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 2 திங்கள் அன்று உயர்நிலைப் பள்ளியை மூட முடிவு செய்துள்ளோம். பள்ளி வளாகத்தை கிருமி நீக்கம் செய்ய எங்களுக்கு மூன்று நாள்கள் அவகாசம் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.