சியாட்டில் (17 ஜன 2020): அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தெற்காசிய நாடுகளின் மதச்சார்பற்ற ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியற்றிற்கு எதிராக சியாட்டில் நகரசபை தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த தீர்மானம் குறித்து விளக்கம் அளித்து பேசிய நகரசபை உறுப்பினர் கேஷ்மா சவந்த் (Kshama Sawant) குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை வலதுசாரி சிந்தனை உள்ள அரசின் கோட்பாடு என்று தெளிவுபடுத்தினார்.
மேலும் இந்த சட்டத்தினால் இந்தியாவில் 200 மில்லியன் முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவை ஆளும் மோடி அரசு, முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினர்.
இந்த தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.