அமெரிக்காவில் அதிரடி – சியாட்டில் சிட்டி கவுன்சில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் – VIDEO

Share this News:

சியாட்டில் (04 பிப் 2020): அமெரிக்காவின் சியாட்டில் சிட்டி கவுன்சில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை உலகின் பலம் வாய்ந்த நகரசபையில் ஒன்றாகும். இங்கு இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று விவாதம் நடைபெற்றது. மேலும் வாக்கெடுப்பின் அடைப்படையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சிக்கு எதிராகவும் அதிக வாக்குகள் கிடைத்ததை அடுத்து இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

முன்னதாக கடந்த மாதம் 17 ஆம் தேதி சியாட்டில் சிட்டி கவுன்சில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதனை வாக்கெடுப்புக்கு விடுவது என தீர்மானிக்கப்படது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்திய அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply