கமல் சீமான் கட்சிகளின் வாக்குகளால் யாருக்கு பாதகம்? – சர்வேயில் இறங்கிய பாஜக!

சென்னை (15 ஏப் 2021): 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு நேரடி போட்டி இருந்தாலும் வாக்குகளை கணிசமான அளவில் சீமான் கட்சியினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் வாக்குகளை பிரித்துள்ளனர். இதனால் டெல்லியின் கவனம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீது தொடர்ந்து உள்ளது. அதன்படி, இரு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உளவுத்துறை அனுப்பிய…

மேலும்...

அதிமுகவில் உட் பூசல் – டிடிவி தினகரன் டெல்லி பயணம்!

சென்னை (20 செப் 2020): அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் நீடித்து வரும் நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஈபிஎஸ் ஆதரவாளர்களும் கோஷமிட்டதாகவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஜனவரியில் விடுதலையாவார் என செய்திகள்…

மேலும்...

முன்னுக்‍குப்பின் முரணான தகவல்கள் – குழப்பம்: டிடிவி தினகரன் சாடல்!

சென்னை (19 ஏப் 2020): கொரோனா தடுப்புப் பணி பற்றி, முதலமைச்சர் முதல், அதிகாரிகள் வரை தொடர்ந்து முன்னுக்‍குப்பின் முரணான தகவல்களை தெரிவிப்பதாக, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் . டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில் கூறியிருப்பதாவது; “தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய்த்தடுப்புப்பணிகளில் தொடக்கம் முதலே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் குழப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் முதல் அதிகாரிகள் வரை முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக்…

மேலும்...

தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் ரூ 1 கோடி நிதி!

சென்னை (30 மார்ச் 2020): கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசுக்கு தொகுதி நிதியிலிருந்து ரூ 1 கோடி வழங்குவதாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மேற்கொண்டு வரும், பெருந்தொற்று நோயான கொரோனா தடுப்புப் பணிகளுக்‍காக, தமது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து, ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையாளருக்‍கு திரு.டிடிவி தினகரன் கடிதம் அனுப்பியுள்ளார். இதனிடையே, திரு.டிடிவி தினகரன் தலைவராகப்…

மேலும்...