சென்னை (15 ஏப் 2021): 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு நேரடி போட்டி இருந்தாலும் வாக்குகளை கணிசமான அளவில் சீமான் கட்சியினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் வாக்குகளை பிரித்துள்ளனர்.
இதனால் டெல்லியின் கவனம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீது தொடர்ந்து உள்ளது.
அதன்படி, இரு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உளவுத்துறை அனுப்பிய தகவலின்படி, கமலும், சீமானும் பிரிக்கும் வாக்குகளில் பெருமளவு திமுகவுக்குத்தான் பாதகம் என்றும், தினகரனின் அமமுக பிரிக்கும் வாக்குகளால் முழுமையாக அதிமுகவுக்குப் பாதிப்பு என்றும் ரிப்போர்ட் போயிருப்பதாக கூறப்படுகிறது.