நிர்பயா குற்றவாளிகள் நால்வரின் மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது!

புதுடெல்லி (20 மார்ச் 2020): நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரின் தூக்குத் தண்டனையும் இன்று காலை நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் கடந்த 2012, டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங்…

மேலும்...

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு மார்ச் 3 ஆம் தேதி தூக்கு!

புதுடெல்லி (17 பிப் 2020): நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது. நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான புதிய தேதியை அறிவிக்குமாறு நிர்பயாவின் பெற்றோர் மற்றும் தில்லி அரசு தொடர்ந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி தர்மேந்தர் ரானா, முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் மாதம் 3ம் தேதி காலை 6 மணிக்கு…

மேலும்...

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு!

இஸ்லாமாபாத் (07 பிப் 2020): பாகிஸ்தானில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை விதிக்கும் தீர்மானம் பாக். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அலி முஹம்மத் கான் இந்தத் தீர்மானத்தை தாக்கல் செய்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சியைத் தவிர்த்து ஏனைய உறுப்பினர்களின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் நிறைவேறியது. அதேவேளை இதற்கு எதிர்ப்பும் இருந்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜா பர்வேஸ் அஷ்ரப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘தணடனைகளை…

மேலும்...

நிர்பயா வழக்கில் திடீர் திருப்பம் – தள்ளிப் போகுமா தூக்குத் தண்டனை?

புதுடெல்லி (28 ஜன 2020): நிர்பயா வழக்கின் திடீர் திருப்பமாக சிறையில் தூக்குத் தண்டனை குற்றவாளி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புதிய மனு நீதிமன்றத்தில் அளிக்கப் பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பில் இருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி…

மேலும்...

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு பிப்ரவரி1 ஆம் தேதி தூக்கு!

புதுடெல்லி (17 ஜன2020): நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2012, டிசம்பா் 16 நள்ளிரவில் ஓடும் பேருந்தில் ‘நிா்பயா’ என்ற துணை மருத்துவ மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்திலிருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டாா். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ‘நிா்பயா’, சிங்கப்பூா் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உயிரிழந்தாா். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 போ்களில் ராம் சிங்…

மேலும்...