நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு பிப்ரவரி1 ஆம் தேதி தூக்கு!

Share this News:

புதுடெல்லி (17 ஜன2020): நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2012, டிசம்பா் 16 நள்ளிரவில் ஓடும் பேருந்தில் ‘நிா்பயா’ என்ற துணை மருத்துவ மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்திலிருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டாா். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ‘நிா்பயா’, சிங்கப்பூா் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 போ்களில் ராம் சிங் என்பவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வழக்கில் தொடா்புடைய மற்றொருவா் சிறாா் பிரிவின் கீழ் வந்ததால், அவா் தொடா்பான வழக்கு சிறாா் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. அந்த வழக்கில் அவா் தண்டனை விதிக்கப்பட்டு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டாா். அங்கு மூன்றாண்டு வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.

விசாரணை முடிவில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து குற்றவாளிகள் வினய் ஷர்மா (26), முகேஷ் குமார் (32) ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோல மற்றொரு குற்றவாளியான முகேஷ் சிங் சார்பாகத் தாக்கல் செய்யபட்டிருந்த கருணை மனு யும் குடியரசுத் தலைவர் வெளிக்கிழமை அன்று நிராகரித்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிடும் ஆணையை வழங்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வெள்ளியன்று மனுத் தாக்கல் செய்துது.

இந்நிலையில் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற தில்லி பாட்டியாலா நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.


Share this News:

Leave a Reply