பணம் வந்த கதை – பகுதி 15: ஆயிரம் ரூபாய் நோட்டு!
வெகு நாட்களுக்குப் பிறகு சேது சபைக்கு வந்திருந்தார். “இவ்வளவு நாள் ஆப்சென்ட் ஆன இவரை என்ன பண்ணலாம்?” என்று ஆரம்பித்து வைத்தார் பிரகாசம். “பெஞ்சு மேல ஏத்திடுவோமா?” – அருள் “தோப்புக்கரணம்?” – நல்லையா “அபராதம் விதிச்சிடுவோம்” என்றார் ஜி. “இது என்னய்யா அநியாயமாக இருக்கிறது? இதுவரை விளக்கிய பாடங்களை எல்லாம் நீங்கள் நன்றாக உள்வாங்கிக் கொள்வதற்காகத்தான் இந்தச் சிறிய இடைவெளி. “ என்றார் சேது கண்சிமிட்டலுடன். “என்னது? சிறிய இடைவெளியா? இந்த சமாளிஃபிகேசனெல்லாம் வேண்டாம். முதல்ல…