பாஜகவில் இணைந்த அதிமுக பிரபலம்!
புதுடெல்லி(10 ஜூன் 2023): அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் அருண் சிங் முன்னிலையில் மைத்ரேயன் இணைந்தார். அப்போது பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உடனிருந்தார்.