ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த தொழிலதிபர் மாரடைப்பால் மரணம்!

இந்தூர் (07 ஜன 2023): ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தொழிலதிபர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தார். ஐம்பத்தைந்து வயதான பிரதீப் ரகுவன்ஷி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஜிம்மிற்கு வந்த பிரசாத், உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில், பிரசாத் திடீரென சரிந்து விழுந்தது பதிவாகியுள்ளது. அவர் பிரசாத் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டதாக…

மேலும்...

தவறான தகவலை பரப்பாதீர்கள் -நடிகர் விக்ரமின் மேலாளர் தகவல்!

சென்னை (08 ஜூலை 222): நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு இல்லை, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அவரின் மேலாளர் தெரிவித்துள்ளார் விக்ரமுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனை விக்ரமின் மேலாளர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛விக்ரமிற்கு லேசாக நெஞ்சு வலிப்பது போன்ற உணர்வு இருந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து கொண்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். தற்போது விக்ரம் நலமாக உள்ளார். ஓரிரு நாளில்…

மேலும்...

நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மருத்துவ மனையில் அனுமதி!

சென்னை (08 ஜூலை 222): பிரபல நடிகர் விக்ரமுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்ரமுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தின் டீஸர் வெளியீடு இன்று மாலை நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்!

பிசிசிஐ அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு (வயது 61) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டார். அங்கு அவருக்கு ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கபில்தேவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்...

நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பால் மரணம்!

பெங்களூரு (09 ஜூன் 2020): பிரபல கன்னட இளம் நடிகர் சிரஞ்சீவி சஜ்ரா மாரடைப்பால் உயிரிழந்தர். நடிகர் சிரஞ்சீவி (39) இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்து நிலையில் , திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பெங்களூரில் நேற்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பிரபலங்கள்…

மேலும்...