மத ஒற்றுமைக்காக திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்த முஸ்லிம்!

மீரட் (02 மார்ச் 2020): மத ஒற்றுமைக்காக திருமண பத்திரிகையை வித்தியாசமாக அச்சடித்துள்ளார் முஸ்லிம் ஒருவர். மீரட் நகரைச் சேர்ந்த முஸ்லிம் நபர் தனது மகள் திருமணத்துக்காக அச்சடித்த திருமணப் பத்திரிகையில் ராதாகிருஷ்ணர், பிள்ளையார் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. மார்ச் 4ம் தேதி ஹஸ்தினாபுரத்தைச் சேர்ந்த மொஹ்ம்மது சராஃபத் மகள் அஸ்மா கட்டூனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணப் பத்திரிகைதான் மேற்சொன்ன இந்துக் கடவுள்களின் புகைப்படங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மொஹ்ம்மது சராஃபத் கூறுகையில், இந்து –…

மேலும்...

சிஏஏ போராட்டத்தில் போலீஸாரால் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்குப்பதிவு!

மீரட் (17 பிப் 2020): உத்திர பிரதேசம் மீரட்டில் சிஏஏ போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், கடந்த டிசம்பர் 20ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், தடையை மீறி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலிஸார் கற்களை வீசியும், தடியடி நடத்தியும்…

மேலும்...

மனைவி அழகாக இருந்ததால் கணவன் செய்த காரியம்!

மீரட் (05 பிப் 2020): மனைவி தன்னை விட அழகாக இருந்ததால் கணவன் செய்த காரியம் உத்திர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த ஆரிப் என்பவருக்கும், ரோஷ்னி என்ற பெண்ணிற்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆரிப்பை விட ரோஷ்ணி மிகவும் அழகாக இருப்பார். மனைவி தன்னை விட அழகாக இருந்ததால் ஆரிபிற்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் சந்தேக தீயாக மாறி, தன் மனைவியின் அழகை…

மேலும்...

மோடி அமித்ஷாவுக்கு எதிராக காய் நகர்த்தும் ராஜ்நாத் சிங்!

மீரட் (23 ஜன 2020): இந்திய முஸ்லிம்கள் மீது யாரும் கை வைக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மீரட்டில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது யாராக இருந்தாலும் சரியே என்றார். மேலும் குடியுரிமை சட்டம் எதிர்கட்சிகளால் சிறுபான்மையினருக்கு எதிரானதுபோல் திசை திருப்பப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். அமித் ஷா, யோகி…

மேலும்...