மீரட் (02 மார்ச் 2020): மத ஒற்றுமைக்காக திருமண பத்திரிகையை வித்தியாசமாக அச்சடித்துள்ளார் முஸ்லிம் ஒருவர்.
மீரட் நகரைச் சேர்ந்த முஸ்லிம் நபர் தனது மகள் திருமணத்துக்காக அச்சடித்த திருமணப் பத்திரிகையில் ராதாகிருஷ்ணர், பிள்ளையார் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
மார்ச் 4ம் தேதி ஹஸ்தினாபுரத்தைச் சேர்ந்த மொஹ்ம்மது சராஃபத் மகள் அஸ்மா கட்டூனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
இந்த திருமணப் பத்திரிகைதான் மேற்சொன்ன இந்துக் கடவுள்களின் புகைப்படங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மொஹ்ம்மது சராஃபத் கூறுகையில், இந்து – முஸ்லிம் ஒற்றுமையை நாட்டுக்கு எடுத்துக்கூற இது மிகச் சிறந்த யோசனையாக இருக்கும் என்று கருதினேன். இவ்விரு மதத்தினருக்குள்ளே பிரிவினையை ஏற்படுத்தி வன்முறை மூலம் ஆதாயம் தேட முயலும் இந்த சூழ்நிலையில் இது மிக முக்கியம் என்று கருதினேன். இந்த முன்முயற்சிக்கு எனது நண்பர்களும் பெருத்த வரவேற்பு தெரிவித்தனர் என்கிறார்.