விஜய் சேதுபதிக்கு அவமானம் – திருமாவளவன் கருத்து!

சென்னை (19 அக் 2020) : 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேயற்றப்பட்டுள்ளார் என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “விஜய் சேதுபதி தமிழினத்தின் கோரிக்கையைப் புறந்தள்ளினார். மு.முரளிதரன் விஜய்சேதுபதியைப் புறந்தள்ளினார். அவர் ‘800’ படத்தில் நடிப்பதிலிருந்து வெளியேறவில்லை; வெளியேற்றப்பட்டார். அவர்,மகிழ்ச்சியாய் அல்ல; விரக்தியாய் “நன்றிவணக்கம்” என்கிறார். இது அவருக்குநேர்ந்த அவமதிப்பு. என்று திருமா தெரிவித்துள்ளார்.

மேலும்...

முரளிதரன் வேண்டுகோள் எதிரொலி – முத்தையா முரளிதரன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்?

சென்னை (19 அக் 2020): இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு தயாராகும் 800 திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என கருத்து கூறி வந்தனர். டிவிட்டரிலும் ஷேம் ஆன்…

மேலும்...

தமிழனாக பிறந்தது குற்றமா? – முத்தையா முரளிதரன் பரபரப்பு அறிக்கை

சென்னை (16 அக் 2020): முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் முத்தையா முரளிதரன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது: ‘இதுநாள்‌ வரை என்‌ வாழ்க்கையில்‌ பல சர்ச்சைகளைக் கடந்தே வந்துள்ளேன்‌. அது விளையாட்டானாலும்‌ சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும்‌ சரி. தற்போது எனது வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ திரைப்படத்தைச்‌ சுற்றி பல்வேறு சர்ச்சைகள்‌, விவாதங்கள்‌ எழுந்துள்ள நிலையில்‌ அதற்கான…

மேலும்...

விஜய் சேதுபதிக்கு பாஜக ஆதரவு – முத்தையா முரளிதரன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகலா?

சென்னை (16 அக் 2020): முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இது “800” என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எழுத்தாளர் ஜெயபாலன், சீமான், பாரதிராஜா, தியாகு, கவிஞர்…

மேலும்...