முரசொலி பத்திரிகை நிலம் மீது அவதூறு – டாக்டர் ராமதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

சென்னை (22 பிப் 2020): முரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என்று அவதூறு செய்தி பரப்பியது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என்று அவதூறு செய்தி பரப்பியதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக பிரமுகர் சீனிவாசன் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கில் வழக்கில், வரும் மார்ச் 20-ஆம் தேதி பாமக…

மேலும்...

ஒரிஜினலை காட்டுங்கள் – ரஜினி விவகாரத்தில் எச்.ராஜா கேள்வி!

சென்னை (21 ஜன 2020): “முரசொலி பத்திரிகை அலுவலகத்தின் மூலப் பத்திரத்தை காட்டுங்கள்!” என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா திமுகவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் ரஜினி வீடு முற்றுகை இடப்படும் என பெரியார் அமைப்புகள்…

மேலும்...

ரஜினிக்கு முரசொலி இதழ் பொளேர் பதில்!

சென்னை (18 ஜன 2020): முரசொலி வைத்திருந்தால் திமுக காரர் என்றும் துகளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக முரசொலி பத்திரிகை பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ”முரசொலி” வைத்திருந்தால் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. அதில், “முரசொலி வைத்திருந்தால் ‘தமிழன்’ என்று பொருள். அதுவும் திராவிட இயக்கத் தமிழன் என்று பொருள். ‘முரசொலி’ வைத்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் என்று பொருள். தன்னை ஒடுக்கியவர் யாரென்று உணரத் தொடங்கி…

மேலும்...

பெரியார் மீது அவதூறு பரப்பியதாக ரஜினி மீது போலீசில் புகார்!

சென்னை (18 ஜன 2020): நடிகர் ரஜினிகாந்த் பெரியார் மீது அவதூறு பரப்பியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, நாட்டுக்கு ‘சோ’ ராமசாமி போன்ற பத்திரிகையாளர்கள் தேவை என்று பேசினார். அப்போது, “முரசொலி வைத்திருப்பவர்கள் திமுககாரர்கள், துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்று அவர் பேசியதும், தந்தை பெரியார் பேரணி குறித்து பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறு மற்றும்…

மேலும்...

சோவே பைத்தியம் என்று சொல்லிட்டார் (வீடியோ) – ரஜினியை கலாய்த்த திமுக எம்.பி!

சென்னை (16 ஜன 2020): துக்ளக் படித்தால் பைத்தியம் பிடிக்கும் என்று சோவே சொல்லும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் திமுக எம் பி செந்தில்குமார். துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய ரஜினிகாந்த் “முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று…

மேலும்...

ரஜினிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

சென்னை (15 ஜன 2020): ரஜினியின் துக்ளக் விழா பேச்சுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றபோது அதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது ’முரசொலி வைத்திருந்தால் அவன் திமுக காரன், துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி என்று அந்த காலத்தில் பேசுவார்கள். அந்த வகையில் துக்ளக் எல்லோரும் படியுங்கள்’ என்று கூறினார். முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித்…

மேலும்...

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளியா? – ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

சென்னை (15 ஜன 2020): துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று கூறி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் நடிகர் ரஜினி. பத்திரிகையாளர், சோ.ராமசாமி தொடங்கிய துக்ளக் இதழ் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டனர். விழாவில், துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு இதழை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா…

மேலும்...