முஹம்மது நபியை இழிவு படுத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

போபால் (30 ஜன 2023): முஹம்மது நபியை இழிவு படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி அன்று ஷாருக்கான் நடித்த பதான் படத்திற்கு எதிராக திரையரங்கம் முன்பு நடந்த போராட்டத்தின் போது பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்க முஹம்மது நபியை இழிவுபடுத்து வகையில் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் எழுப்பட்ட முழக்கங்கள் சர்ச்சையாகி எதிர்ப்பு வலுத்து பல முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து குற்றவாளிகள்…

மேலும்...

முஹம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய பதிவு – உத்திர பிரதேசத்தில் பதற்றம்!

கோண்டா (12 அக் 2022): உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றி உள்ளூர் இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது. உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்த்த ரிக்கி என்ற இளைஞர் முஹம்மது நபி குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவொன்றை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ரிக்கியின் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கியதைத் தொடர்ந்து பிரச்சனை வெடித்தது. பின்னர் நிலைமையை…

மேலும்...

முஹம்மது நபிக்கு எதிரான பாஜக எம்எல்ஏவின் கருத்துக்கு புனித மக்கா, மதீனா ஹரமைன் ஷரீபைன் கடும் கண்டனம்!

மக்கா (24 ஆக. 2022): முகமது நபிக்கு எதிராக ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) எம்எல்ஏ ராஜா சிங் தெரிவித்த இழிவான கருத்துக்கு, மக்கா செய்தி ஊடகமான ஹரமைன் ஷரிஃபைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆளும் பாஜகவின் தெலுங்கானா மாநில உறுப்பினரான ராஜா சிங் எம்.எல்.ஏ, திங்கள் கிழமை அன்று சமூக வலைதளத்தில் முகமது நபிக்கு எதிரான அவதூறான கருத்துக்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டார். இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பின. இதனால் தெலுங்கானா மாநிலத்தில்…

மேலும்...

முஹம்மது நபி குறித்து இழிவாக பேசிய பாஜக எம்எல்ஏ கைது!

ஐதராபாத் (23 ஆக 2022): முஹம்மது நபி குறித்து இழிவாக பேசிய தெலுங்கானா பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா  பாஜக எம்எல்ஏ ராஜா சிங் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக சில வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பினார். இதனை அடுத்து தெலுங்கானாவில் பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. மேலும் ராஜா சிங்கிற்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து ராஜா சிங் செவ்வாய் கிழமை காலை போலீசாரால் கைது…

மேலும்...

உதய்பூர் படுகொலைக்கு நிபுர் சர்மாவே காரணம் – உச்ச நீதிமன்றம்.!

புதுடெல்லி (01 ஜூலை 2022): நாட்டில் தற்போது நிலவும் பதற்றத்திற்கும் உதய்புர் படுகொலைக்கும் காரணம் நிபுர் சர்மாவே என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது உச்ச நிதீமன்ற நீதிபதிகள் நுபுர் சர்மவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:- நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார்….

மேலும்...

முஹம்மது ஜுபைர் கைதுக்கு ஐ.நா செய்தித் தொடர்பாளர் கண்டனம்!

வாஷிங்டன் (29 ஜூன் 2022): இந்தியாவில் Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டதற்கு கைது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஐநா செய்தித் தொடர்பாளர், ஊடகவியலாளர்கள் எழுதுவதற்கும், ட்வீட் செய்வதற்கும், பேசுவதற்கும் இவ்வாறு சிறையில் அடைக்கப் படுவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான Alt News இணை நிறுவனர் ஜுபைர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட ட்வீட் ஒன்றின் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக டெல்லி காவல்துறையால் திங்கள்கிழமை (27-06-2022)…

மேலும்...

முஹம்மது ஜுபைர் கைதும் பின்னணியும்!

புது டெல்லி (28 ஜூன் 2022): பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர், மத உணர்வை புண்படுத்தியதால் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினாலும் உண்மை வேறு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான AltNews இன் இணை நிறுவனர் முஹம்மது ஜுபைர் டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். சமீபத்தில் முஹம்மது நபி குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா-வின் உரையை உலகறியச் செய்தவர் முஹம்மது ஜுபைர். பாஜக-வின் சர்ச்சை தொடர்பாக அரபுலகம்…

மேலும்...

பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர் கைது!

புதுடெல்லி (28 ஜூன் 2022): உண்மைச் சரிபார்ப்பு வலைத்தளமான AltNews இன் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா முஹம்மது நபி குறித்து பரப்பிய அவதூரை உலகறிய செய்தவர் முஹம்மது ஜுபைர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அவசர பதிந்த ஒரு ட்வீட் குறித்த புகாரின் அடிப்படையில் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் முகமது ஜுபைரை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு திங்கள்கிழமை…

மேலும்...