முஹம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய பதிவு – உத்திர பிரதேசத்தில் பதற்றம்!

Share this News:

கோண்டா (12 அக் 2022): உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றி உள்ளூர் இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்த்த ரிக்கி என்ற இளைஞர் முஹம்மது நபி குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனை அடுத்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ரிக்கியின் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கியதைத் தொடர்ந்து பிரச்சனை வெடித்தது.

பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட ரிக்கியை கைது செய்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக 25 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சௌக் பஜார் பகுதியில் இரவில் வன்முறை வெடித்ததாகவும், ஆனால் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் எஸ்பி ஆகாஷ் தோமர் தெரிவித்தார். அமைதியை நிலைநாட்ட காவல் குழுவொன்று அங்கு நிறுத்தப்பட்டுள்ளது என்று எஸ் பி தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply