முஹம்மது நபியை இழிவு படுத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

Share this News:

போபால் (30 ஜன 2023): முஹம்மது நபியை இழிவு படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 25 ஆம் தேதி அன்று ஷாருக்கான் நடித்த பதான் படத்திற்கு எதிராக திரையரங்கம் முன்பு நடந்த போராட்டத்தின் போது பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்க முஹம்மது நபியை இழிவுபடுத்து வகையில் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பட்ட முழக்கங்கள் சர்ச்சையாகி எதிர்ப்பு வலுத்து பல முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களின் பெயர்களை வெளியிட போலீசார் தயாராக இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது IPC பிரிவுகள் 295-A (வேறு மதத்தினரின் உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் செயல்), 153A (பல்வேறு மதப் பிரிவினரிடையே பகைமையை வளர்ப்பது), 505 (மிரட்டல்) மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் முஹம்மது நபியை இழிவு படுத்தும் வகையில் கோஷம் எழுப்பிய நான்கு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply