தாலிபானை ஆதரிக்கும் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய வலியுறுத்தல்!

புதுடெல்லி (23 ஆக 2021): தாலிபானை ஆதரித்ததற்காக அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் குறித்து ரிபப்ளிக் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்திகளில் ஒன்றில் “ரிபப்ளிக் வித் தலிபான்” என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது. “ரிபப்ளிக் வித் தலிபான்” என்ற ஹேஷ்டேக் சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் ரிபப்ளிக் டிவி மற்றும் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக சமூக வலைதளங்களில்…

மேலும்...

தேச பக்தர்கள் போர்வையில் தேச விரோதிகள் – அர்னாப் மீது விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்!

புதுடெல்லி (20 ஜன 2021): ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் உரையாடல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அர்னாப் மீதான டிஆர்பி மோசடி வழக்கின் விசாரணையின் போது பாலகோட் தாக்குதல் குறித்து அர்னாபுக்கு முன்கூட்டியே தெரிந்த விவகாரம் வெளி வந்தது. பாலகோட் தாக்குதல் குறித்து வெளியான அர்னாபின் வாட்ஸ் ஆப் உரையாடல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை அர்னாப்…

மேலும்...

அர்னாப் வாட்ஸ் ஆப் உரையாடல் – முன்னாள் BARC தலைமை அதிகாரி மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (16 ஜன 2021): : ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியுடன் நடந்த வாட்ஸ்அப் உரையாடல் கசிந்துள்ள நிலையில் முன்னாள் பார்க் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ் குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிஆர்பி முறைகேடு தொடர்பான வழக்கில் பார்த்தோ தாஸ் குப்தாவைக் கடந்த மாதம் மும்பை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் ஆப் உரையாடல் இணையத்தில் கசிந்து இவ்வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச்…

மேலும்...

புல்வாமா தாக்குதலை முன்னரே தெரிந்துகொண்ட அர்னாப் கோஸ்வாமி – பரபரப்பு தகவல்!

புதுடெல்லி(16 ஜன 2021): இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதல் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்கூட்டியே தெரிந்து கொண்டதற்கான வாட்ஸ்ஆப் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசினால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும், டிஆர்பி ஊழல் வழக்கில் மேலும் ஒரு முன்னேற்றமாக, குடியரசு தொலைக்காட்சியின் நெறியாளர் அர்னப் கோஸ்வாமி புல்வாமா தாக்குதல் நடப்பது தொடர்பாக முன்னரே தெரிந்திருந்ததற்கு ஆதாரமாக, வாட்ஸ்ஆப் அரட்டை இணையத்தில் கசிந்துள்ளது. டி.ஆர்.பி ரேட்டிங்கைத் தனக்கு சாதகமாக கையாளவும், பாஜக அரசாங்கத்திடம் உதவி பெறவும் அவர்…

மேலும்...

அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன – மகாராஷ்டிரா அரசு திட்டவட்டம்!

மும்பை (07 ஜன 20221): ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிரான டிஆர்பி வழக்கில் வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று மகாராஷ்டிரா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டிஆர்பி ரேட்டிங் வழக்கில் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி அர்னாப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜனவரி 15 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான கபில் சிபல், தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனமான…

மேலும்...

அர்ணாப் கோசுவாமிக்கு பிரிட்டிஷ் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் ரூ .19 லட்சம் அபராதம்!

புதுடெல்லி (23 டிச 2020): ரிபப்ளிக் டிவி க்கு பிரிட்டிஷ் அரசு 2000 பவுண்ட்ஸ் (சுமார் 19 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. குடியரசு டிவி, அர்னாப் கோஸ்வாமிக்கு சொந்தமானது, இதில் கடந்த செப்டம்பர் 6, 2019 அன்று ஒளிபரப்பப்பட்ட வெறுக்கத்தக்க பேச்சு, அநாகரீகமான மொழி மற்றும் தவறான மற்றும் கேவலமான நடைமுறைக்காக, இங்கிலாந்து தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் 19 19 பவுண்ட்ஸ் (19 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. சர்சைக்குரிய அந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான்…

மேலும்...

ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் ஊடகங்களுக்கு எதிராக வழக்கு!

மும்பை (13 அக் 2020): பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான், அமீர்கான், அஜேய் தேவ்கன் உள்பட பல்வேறு நடிகர்களை உள்ளடக்கிய 34 பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நிறுவனங்கள் மற்றும் 4 பாலிவுட் அசோசியேசன்கள் இணைந்து ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த தற்கொலை சம்பவம்…

மேலும்...

அர்ணாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார்!

புதுடெல்லி (05 ஜூன் 2020): ஒளிபரப்பு விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து ரிபப்ளிக் டிவி, மற்றும் அர்ணாப் கோஸ்வாமி உள்ளிட்டவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆதரவு தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி மற்றும் அதன் தலைமை செய்தியாளர் அர்ணாப் கோஸ்வாமி உள்ளிட்டோர் வெறுப்பூட்டும் பேச்சுக்களையும், விவாதங்களையும் தொடர்ந்து நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஒளிபரப்பு வழிகாட்டுதல்களை மீறியதாகக் ரிபப்ளிக் தொலைக்காட்சி, மற்றும் அதன் ஹோல்டிங்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை கோரும் துபாய் மீடியா!

துபாய் (08 மே 2020): முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக நாளிதழ் கோரிக்கை வைத்துள்ளது. கல்ஃப் நியூஸ் என்ற புகழ் பெற்ற நாளிதழ் புதன் அன்று வெளியிட்ட சிறப்பு கட்டுரையில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களை பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களான, ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டிவி, ஆஜ் தக், ஏபிபி உள்ளிட்ட சேனல்களை தடை விதிக்க…

மேலும்...

மத உணர்வை காயப்படுத்தியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு!

மும்பை (04 மே 2020): மத உணர்வை காயப்படுத்தியதாக ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி ஊடகத்தில் பேசிய அர்ணாப், பந்தாரா ரெயில்வே நிலையம் அருகில் பொது மக்கள் கூடியதாக பேசிய அர்ணாப் கோஸ்வாமி அவசியமில்லாமல் ஜும்மா மசூதியை குறிப்பிட்டு பேசினார். இது மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்தது. இதுகுறித்து கல்விச் சங்கத்தின் செயலாளர் இர்ஃபான் அபூபக்கர் சேக் மும்பை பைடோனி காவல்…

மேலும்...