பிக்பாஸுக்குப் பிறகு தனலக்‌ஷ்மி முதல் பேட்டி – வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் அதிகம் பேசப்பட்ட நபர் தனலக்‌ஷ்மி. ஜி.பி.முத்து வெளியேறிய பின்பு டல் அடித்த பிக்பாஸ் தனலக்‌ஷ்மியால் சூடுபிடித்தது. ஆனால் அவர் வெளியேறியது பலரை அதிர்ச்சி அடைய வைத்தது. குறிப்பாக இந்த சீசனில் முதன்முதலில் குறும்படம் போடப்பட்டது தனலட்சுமிக்காக தான். பொம்மை டாஸ்க்கில் அசீம் அவர்மீது வைத்த குற்றச்சாட்டை குறும்படம் போட்டு அது பொய் என நிரூபித்தார் கமல்ஹாசன். இவ்வாறு பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளராக இருந்து வந்த தனலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட்…

மேலும்...

பொன்னியின் செல்வன் – சினிமா விமர்சனம்!

70 ஆண்டுகால தமிழ் சினிமாவின் கனவு. எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை முயன்று தயாரிக்க முடியாமல் போன கல்கியின் எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணி ரத்னம் பிரமாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என இந்தியஅளவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார். சோழ மண்ணை ஆண்டு வரும் சுந்தர சோழருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த…

மேலும்...

கோப்ரா – சினிமா விமர்சனம்!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. செவன் ஸ்க்ரீன் லலித் தயாரித்து ரெட் ஜெயிண்ட் இப்படத்தை வெளியிட்டுள்ளது. பணத்துக்காக உலக நாடுகளில் உள்ள முக்கிய புள்ளிகளை கொலை செய்கிறார் விக்ரம். யார் கொலை செய்தார், எதற்காக கொலை செய்தார் என ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கணிதம் மூலம் கணக்கு போட்டு ஒவ்வொரு நபரையும் கொலை செய்கிறார். இந்த கொலைகளை செய்யும் விக்ரமை கண்டுபிடிக்க…

மேலும்...

தவறான தகவலை பரப்பாதீர்கள் -நடிகர் விக்ரமின் மேலாளர் தகவல்!

சென்னை (08 ஜூலை 222): நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு இல்லை, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அவரின் மேலாளர் தெரிவித்துள்ளார் விக்ரமுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனை விக்ரமின் மேலாளர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛விக்ரமிற்கு லேசாக நெஞ்சு வலிப்பது போன்ற உணர்வு இருந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து கொண்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். தற்போது விக்ரம் நலமாக உள்ளார். ஓரிரு நாளில்…

மேலும்...

நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மருத்துவ மனையில் அனுமதி!

சென்னை (08 ஜூலை 222): பிரபல நடிகர் விக்ரமுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்ரமுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தின் டீஸர் வெளியீடு இன்று மாலை நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

நடிகர் விக்ரமுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (16 டிச 2021): நடிகர் விக்ரமுக்குஜ் கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #chiyaanVikram ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து உடல்நலம் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் சமீபத்தில் திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

கருப்பு சிவப்பு மாஸ்க், சைக்கிள், நடைபயணம் – வாக்குப்பதிவில் அசத்திய நடிகர்கள்!

சென்னை (06 ஏப் 2021): தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், முன்னணி நடிகர்கள் சில அடையாளங்களுடன் வாக்களிக்க வந்தமை பேசுபொருளாகியுள்ளது. இன்று தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. மேற்குவங்காளத்தில் 3-வது கட்ட தேர்தலும், அசாமில் 3-வது இறுதிகட்ட தேர்தலும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர்….

மேலும்...